சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாமி சிலைகள் உடைப்பில் மதமாற்ற கும்பல்? பகீர் பின்னணி!

Added : நவ 23, 2021 | கருத்துகள் (56)
Share
Advertisement
பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம் சிறுவாச்சூரில், மலை கோவில் உள்ளது. இது சதுரகிரி, திருவண்ணாமலை கோவில்கள் போல, முக்கியமான ஆன்மிக தலம். அங்கிருக்கும் செல்லியம்மன், பெரியசாமி கோவிலில் உள்ள சாமி சிலைகள், செப்., 6 இரவில், மர்ம நபர்களால் முதல் முறையாக உடைக்கப்பட்டன.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலை தொடர்ந்து, இரு முறை சிறுவாச்சூர் மலை பகுதிக்கு சென்று, உடைபட்ட
சாமி சிலை, உடைப்பு, மதமாற்ற கும்பல்

பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம் சிறுவாச்சூரில், மலை கோவில் உள்ளது. இது சதுரகிரி, திருவண்ணாமலை கோவில்கள் போல, முக்கியமான ஆன்மிக தலம். அங்கிருக்கும் செல்லியம்மன், பெரியசாமி கோவிலில் உள்ள சாமி சிலைகள், செப்., 6 இரவில், மர்ம நபர்களால் முதல் முறையாக உடைக்கப்பட்டன.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலை தொடர்ந்து, இரு முறை சிறுவாச்சூர் மலை பகுதிக்கு சென்று, உடைபட்ட கோவிலையும், சிலைகளையும் தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு செயலர் அஸ்வத்தாமன் பார்த்துள்ளார். அவர் கூறியதாவது: சிறுவாச்சூர் மலை பகுதியில் மர்மமான முறையில், ஏதோ நடப்பதாக மக்கள் அச்சம் தெரிவித்தனர். அதே நேரம், தமிழக அரசும், காவல் துறையும், சாமி சிலைகளை சேதப்படுத்தும் கும்பலை கண்டறிந்து, முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி ஆதங்கப்பட்டனர்.

இதையடுத்து, இந்த விஷயத்தில் தி.மு.க., அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ., தரப்பில் வலியுறுத்தினோம்; நடவடிக்கை இல்லை. இந்நிலையில் தான், செப்., 26ல் மீண்டும் மலை கோவிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. பல சிலைகள், பீடம் வரை தரைமட்டமாக்கப்பட்டு உள்ளன. பெரியசாமி, பைரவர், செங்கமலை, அய்யனார் சாமி சிலைகள் உடைக்கப்பட்டு உள்ளன.


latest tamil news



மதமாற்ற கும்பல்


அடுத்து நவ., 8ம் தேதி இரவும், அதே கோவிலில் மிச்சம் இருந்த சாமி சிலைகளும் உடைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பாதி உடைக்கப்பட்ட நிலையில் இருந்த சாமி சிலைகள், முழுமையாக உடைக்கப்பட்டுள்ளன. சிறுவாச்சூர் சம்பவம் போலவே, ஆந்திராவில் 19 மாதங்களில், 128 கோவில்கள் இடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஆந்திராவைச் சேர்ந்த, பா.ஜ., ராஜ்யசபா எம்.பி., நரசிம்மராவ், 128 கோவில்களில் சிலைகள் தாக்கப்பட்டது குறித்து, பார்லிமென்டில் பேசினார்.

அதன்பின், ஆந்திர அரசு தீவிர கவனம் செலுத்தி விசாரித்தது. விசாரணையின் முடிவில், மதமாற்ற அடிப்படைவாத சக்திகள், சாமி சிலை உடைப்பு மற்றும் ஹிந்து கோவில்கள் தாக்கப்பட்டதன் பின்னணியில் இருப்பதை கண்டறிந்தனர். ஆந்திராவை அடுத்து, தற்போது தமிழகத்திலும் கோவில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. தமிழக தாக்குதல் பின்னணியிலும் மதமாற்ற அடிப்படைவாதிகள் இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இதை போலீசாரிடமும் தெரிவித்துள்ளோம்.

வனத் துறைக்கு சொந்தமான அடர்ந்த காட்டு பகுதியில் இருக்கும், சிறுவாச்சூர் கோவில்களுக்கு பகல் நேரத்தில் செல்வதே சவாலான விஷயம். அப்படி இருக்கையில், சிலைகள் உடைப்பில் அனுபவம் பெற்றவர்களால் தான் இதை செய்திருக்க முடியும். போராட்டம்ஆந்திராவில் கோவில்களை தாக்கிய அதே கும்பலே கூட இதை செய்திருக்கக்கூடும். அதனால், இதை தமிழக அரசு தீவிரமாக விசாரிக்க வேண்டும். இந்த விஷயத்தில் போலீஸ் மற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறை அலட்சியமாக உள்ளன. இதன் பின்னணியில் மர்மம் இருப்பது மட்டும் தெரிகிறது.

மனநிலை பாதித்த ஒருவர் இப்படி செய்ய வாய்ப்பே இல்லை. அதோடு, தனியொருவன் மட்டும் சிறுவாச்சூர் கோவில் சிலை உடைப்பில் ஈடுபட்டிருக்க முடியாது. சிலை உடைப்பில் கைதேர்ந்த கும்பல் தான் இதில் ஈடுபட்டிருக்க வேண்டும். அடுத்த கட்டம் குறித்து ஆலோசித்து வருகிறோம். விரைவில் போராட்டம் அறிவிக்கப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
23-நவ-202119:21:01 IST Report Abuse
elakkumanan பால் டின் மற்றும் பாலைவன , சொந்த பெயரில்லாமல் மாற்று மதத்தின் பெயரில் ஒளிந்திருக்கும் வீர கழிவுகள், இது போன்ற மாற்று மத விஷயங்களில், நவதுவாரங்களை மூடியிருப்பதற்கு பெயர்....பொறுப்பு............
Rate this:
Cancel
selva kumar - port blair,இந்தியா
23-நவ-202118:32:34 IST Report Abuse
selva kumar தமிழ்நாட்டில் இந்து சமய வெறுப்பு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது இந்த திமுக அரசால் ,தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களே இப்போதாவது விழித்துக்கொள்ளுங்கள் இல்லையெண்றால் உங்களுக்கும் இதுபோன்று நடக்கும் நீங்கள் வணங்கும் உங்களது குலதெய்வ கோவிலிலும் இதுபோன்று நடக்கும். இனியும் சிறுபான்மையினருக்காக மட்டுமே இயங்கும் இதுபோன்ற அரசாங்கத்தை எதிர்த்து ஒன்றுகூடுங்கள் இல்லையேல் உங்களது பெயரை ஆபிரகாம் இல்லை அப்துல்லா என வைத்துக்கொள்ளுங்கள் ஏனென்றால் அவர்கள் உங்களை அப்படித்தான் மாற்ற துடிக்கிறார்கள் ,அப்படியில்லையெனில் நாம் நம் வழியில் செல்லும்போது எதற்கு இதுபோன்ற சிலை உடைப்பு சம்பவங்கள் ?
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-நவ-202118:19:41 IST Report Abuse
J.V. Iyer முதல்வரின் மனைவிக்கு இந்த தகவலை தெரிவியுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X