கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பொறுப்பு தலைமை நீதிபதியாக முனிஸ்வர் நாத் பதவியேற்பு

Added : நவ 23, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக, முனிஸ்வர் நாத் பண்டாரி நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு, கவர்னர் ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த சஞ்ஜிப் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பதவிப் பிரமாணம்அதையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி,
 பொறுப்பு தலைமை நீதிபதியாக முனிஸ்வர் நாத் பதவியேற்பு

சென்னை : சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக, முனிஸ்வர் நாத் பண்டாரி நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு, கவர்னர் ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த சஞ்ஜிப் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பதவிப் பிரமாணம்அதையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். பின், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.புதிய பொறுப்பு தலைமை நீதிபதிக்கு, கவர்னர் மாளிகையில் நேற்று பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடந்தது. அவருக்கு, கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின், இதுவரை பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த எம்.துரைசாமி, சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, தலைமை செயலர் இறையன்பு மற்றும் நீதிபதிகள், அமைச்சர்கள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். பொறுப்பு தலைமை நீதிபதி பண்டாரிக்கு, கவர்னர் பூங்கொத்து வழங்கினார்; முதல்வர் ஸ்டாலின் புத்தகங்களை வழங்கினார். கவர்னருக்கும், முதல்வருக்கும், பொறுப்பு தலைமை நீதிபதி பூங்கொத்து வழங்கினார்

.பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் உள்ளிட்ட வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள் வரவேற்புரை நிகழ்த்தினர்.

அதைத் தொடர்ந்து, பொறுப்பு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி பேசியதாவது:தமிழ் மொழியை கற்பதற்கு துவங்கி உள்ளேன்; 'வணக்கம், நன்றி' தற்போது தெரிந்துள்ளேன். பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.


கனவு நனவாகியது


ஆன்மிகம், கலாசாரத்துக்கு பெயர் பெற்றது தமிழகம்; இங்கு பிறந்திருக்க வேண்டுமென்ற கனவு, தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பேற்றதன் வாயிலாக நனவாகி உள்ளது.நீதி பரிபாலனத்துக்கு, வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். என் பணியில் பயமோ, ஒருதலைபட்சமோ இருக்காது.இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார்.பின், பொறுப்பு தலைமை நீதிபதியும், நீதிபதி ஆதிகேசவலுவும் அமர்ந்து, வழக்குகளை விசாரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X