குடியிருப்புகளில் கழிவு நீர் தேக்கம் வில்லிவாக்கத்தில் சுகாதார சீர்கேடு| Dinamalar

குடியிருப்புகளில் கழிவு நீர் தேக்கம் வில்லிவாக்கத்தில் சுகாதார சீர்கேடு

Added : நவ 23, 2021
Share
வில்லிவாக்கம்-வில்லிவாக்கம், நாகேஸ்வரர் காலனியில், மழை நீருடன் தேங்கியுள்ள கழிவு நீரால் கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.பருவ மழை தீவிரம்அடைந்ததையடுத்து சமீபத்தில் கன மழை கொட்டித் தீர்த்தது. பிரதான சாலை உள்ளிட்ட இடங்களில் தேங்கிய மழை நீரை மாநகராட்சியினர் அகற்றி வருகின்றனர்.ஆனால், குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன் தேங்கி உள்ள கழிவு நீர்

வில்லிவாக்கம்-வில்லிவாக்கம், நாகேஸ்வரர் காலனியில், மழை நீருடன் தேங்கியுள்ள கழிவு நீரால் கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.பருவ மழை தீவிரம்அடைந்ததையடுத்து சமீபத்தில் கன மழை கொட்டித் தீர்த்தது. பிரதான சாலை உள்ளிட்ட இடங்களில் தேங்கிய மழை நீரை மாநகராட்சியினர் அகற்றி வருகின்றனர்.ஆனால், குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன் தேங்கி உள்ள கழிவு நீர் அகற்றப்படவில்லை. இதனால், பல இடங்களில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.குறிப்பாக, அண்ணா நகர் மண்டலம் 95வது வார்டு, வில்லிவாக்கம், நாகேஸ்வரர் காலனியில், திருவள்ளுவர் தெரு உள்ளது. இங்கு, தேங்கியுள்ள மழை நீரால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.இது குறித்து பகுதிமக்கள் கூறியதாவது:நாகேஸ்வரர் காலனியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு, பல்வேறு தெருக்களில் மழை நீர் தேங்கியுள்ளது.அதேபோல், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, ஆங்காங்கே சாலையில் கழிவு நீர் நிரம்பி வழிகிறது. இதனால், குடியிருப்புகள் முழுதும் கடும் துர்நாற்றம்வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து குடிநீர்வாரியத்தில் புகார் அளித்தால், அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X