போக்குவரத்துக்கு லாயக்கற்ற பிரதான சாலை

Added : நவ 23, 2021
Advertisement
அரும்பாக்கம்-தொடர் மழையால், விநாயகபுரம் பிரதான சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.அண்ணா நகர் மண்டலம் 108வது வார்டு, எம்.எம்.டி.ஏ., காலனியில், விநாயகபுரம் பிரதான சாலை உள்ளது.இது, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனி மற்றும் 100 அடி சாலைக்கு செல்லும் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.இச்சாலை முறையான

அரும்பாக்கம்-தொடர் மழையால், விநாயகபுரம் பிரதான சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.அண்ணா நகர் மண்டலம் 108வது வார்டு, எம்.எம்.டி.ஏ., காலனியில், விநாயகபுரம் பிரதான சாலை உள்ளது.இது, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனி மற்றும் 100 அடி சாலைக்கு செல்லும் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.இச்சாலை முறையான பராமரிப்பின்றி, பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக மாறி, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.சமீபமாக பெய்து வரும் மழையால், சாலை மேலும் மோசமடைந்து மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், சாலையில் மேடு பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X