திடீர் மழையால் தத்தளித்த தி.நகர் நெரிசலால் வாகன ஓட்டிகள் 'சடுகுடு'

Added : நவ 23, 2021
Share
Advertisement
தி.நகர்-சென்னையில் நேற்று அதிகாலை பெய்த மழையால், தி.நகர் பிரதான சாலைகள் வெள்ளக்காடாக மாறின. இதனால்ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.வங்கக்கடலில் ஏற்பட்டகாற்றழுத்த தாழ்வு பகுதியால், 6 மற்றும் 7ம் தேதி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை பெய்தது.இதில், கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட தி.நகர்,

தி.நகர்-சென்னையில் நேற்று அதிகாலை பெய்த மழையால், தி.நகர் பிரதான சாலைகள் வெள்ளக்காடாக மாறின. இதனால்ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.வங்கக்கடலில் ஏற்பட்டகாற்றழுத்த தாழ்வு பகுதியால், 6 மற்றும் 7ம் தேதி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை பெய்தது.இதில், கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட தி.நகர், கே.கே.நகர், வடபழநி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.இந்நிலையில், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியதால், 17ம் தேதி முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மீண்டும் தண்ணீர் தேங்கியது.இந்நிலையில், நேற்று அதிகாலை பெய்த மழையில், தி.நகர் பசுல்லா சாலை, உஸ்மான் சாலை, ஜி.என்., செட்டி சாலை, தி.நகர் பஸ் நிலையம், கே.கே.நகர், ராஜமன்னார் சாலை.ஆர்.கே.சண்முகம் சாலை, காமராஜர் சாலை, கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பிரதான சாலை, வடபழநி ஆற்காடு சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது.இதனால், இப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் மழை நீரில் சென்ற இரு சக்கர வாகனங்கள் பல பழுதடைந்ததால், வாகன ஓட்டிகள் தள்ளியபடி சென்றனர்.அதேபோல், ரங்கராஜபுரம் டூ -- வீலர் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதையடுத்து, மீண்டும் மூடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் தேங்கிய மழை நீருடன், கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் பகுதிமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X