பொது செய்தி

தமிழ்நாடு

மெரினா அணுகு சாலையில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை

Added : நவ 23, 2021
Share
Advertisement
சென்னை-மழை நீர் தேக்கம் காரணமாக, மெரினா கடற்கரை அணுகு சாலை உள்ளிட்ட இடங்களில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மழை நீர் தேக்கம் காரணமாக வடபழனி - பெரியார் பாதை, 100 அடி சாலையில் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டும். அதேபோல தேனாம்பேட்டை - முத்தையா தெரு ஜங்ஷன், வளசரவாக்கம் - திருவள்ளூர் சாலை, தி.நகரில் வடக்கு உஸ்மான் சாலையில்போத்தீஸ் வரை, வாகனங்கள் மெதுவாகச் செல்ல

சென்னை-மழை நீர் தேக்கம் காரணமாக, மெரினா கடற்கரை அணுகு சாலை உள்ளிட்ட இடங்களில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மழை நீர் தேக்கம் காரணமாக வடபழனி - பெரியார் பாதை, 100 அடி சாலையில் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டும். அதேபோல தேனாம்பேட்டை - முத்தையா தெரு ஜங்ஷன், வளசரவாக்கம் - திருவள்ளூர் சாலை, தி.நகரில் வடக்கு உஸ்மான் சாலையில்போத்தீஸ் வரை, வாகனங்கள் மெதுவாகச் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.மெரினா அணுகு சாலையில், கலங்கரை விளக்கம் முதல் உழைப்பாளர் சிலை வரை வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது. கே.கே.நகர் அண்ணா பிரதான சாலையில் மழை நீர் வடிகால் சீரமைப்பு பணி நடப்பதால், உதயம் தியேட்டர் நோக்கிச் செல்லும் வாகனங்கள், எதிர் திசையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. காசி தியேட்டர் வழியாக, அண்ணா பிரதான சாலை நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் மட்டும், அசோக் பில்லர் நோக்கி திருப்பி விடப்படுகின்றன.தி.நகர் பசுல்லா சாலையில் மழை நீர் வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், ஜி.என்.செட்டி சாலை - வாணி மஹால் சிக்னலில் இருந்து செல்லும் வாகனங்கள், ஹபிபுல்லா சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளதாக, போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X