சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பூமிநாதன் கொலையில் சிறுவர்கள்; பிஞ்சு வயதிலேயே இத்தனை கல் நெஞ்சமா?

Added : நவ 23, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுக்கோட்டை மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன், ஆடு திருடர்களை விரட்டி பிடிக்கச் சென்றார். ஆனால், அவர்களோ பூமிநாதனை வெட்டி கொன்று விட்டனர். இதையடுத்து, மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் இரண்டு பேர், 10 வயதான சிறுவர்கள். சொகுசு வாழ்க்கைஇதுகுறித்து, மதுரை குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜன் கூறியதாவது:
 பூமிநாதன் கொலையில் சிறுவர்கள்; பிஞ்சு வயதிலேயே இத்தனை கல் நெஞ்சமா?

புதுக்கோட்டை மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன், ஆடு திருடர்களை விரட்டி பிடிக்கச் சென்றார். ஆனால், அவர்களோ பூமிநாதனை வெட்டி கொன்று விட்டனர். இதையடுத்து, மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் இரண்டு பேர், 10 வயதான சிறுவர்கள்.


சொகுசு வாழ்க்கை


இதுகுறித்து, மதுரை குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜன் கூறியதாவது: பத்து வயது சிறுவர்கள், கொலை செய்யும் அளவுக்கு எப்படி துணிந்தனர் என்று பார்க்க வேண்டும். சிறுவர்களை வைத்து குற்றச் செயலை செய்கின்றனர். அவர்களுக்கான தண்டனை மிக குறைவாக உள்ளதே அதற்கு காரணம். வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, தவறான பாதைக்கு செல்வது நடக்கிறது.

சாப்பாடு, போதை பொருள், கை நிறைய பணம், நல்ல உடைகள், வாகனம் எல்லாம் கிடைக்கும் போது, அவற்றை கொடுப்பவரை ஆதர்ஷமாக நினைக்கிறான். அந்த மனிதர், என்ன சொல்கிறாரோ, அதை செய்ய வேண்டியது தலையாய கடமையாக நினைக்கிறான். தவறான வழியில் பணம் திரட்டும் ரவுடி ஒருவரிடம் சிக்கும் சிறார்கள், ரவுடியின் கட்டளையை பிசகாமல் செய்து முடிக்கின்றனர்.


தவறான பாதை


கொரோனா பாதிப்புக்கு பின், பள்ளி செல்லும் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதற்கு காரணம் வறுமை. அதை போக்க, குழந்தைகள் வேலைக்கு செல்கின்றனர். அங்கு நல்ல சூழல் அமையா விட்டால் சிக்கல் தான். தவறான நண்பர்களோடு சேர்ந்து, தவறான பாதையில் பயணிக்க துவங்கி விடுகின்றனர். 'போக்சோ' சட்டத்தில் சிக்கும் சிறுவர்களில் பெரும்பாலானோர், வீட்டுக்கும், சமூகத்துக்கும் அடங்காத பிள்ளைகள் தான். சிறார் குற்றவாளிகளை திருத்த, அரசிடம் பல திட்டங்கள் உள்ளன.


லேசான அச்சம்


குறிப்பாக, செங்கல்பட்டில் குழந்தைகள் மறுவாழ்வு கூடம் உள்ளது. அங்கு செல்லும் சிறார்களில் பெரும்பான்மையோர் திருந்தி சகஜமான வாழ்க்கைக்கு வருகின்றனர். அங்கு சென்றும் திருந்தாதவர்களும் உண்டு. போலீஸ் என்றால் பெரியவர்களுக்கும் கூட லேசான அச்சம் இருக்கும். ஆனால், சிறுவர்கள் சேர்ந்து ஒரு போலீசை வெட்டி கொல்கின்றனர் என்றால், அவர்கள் எப்படி கல் நெஞ்சனாக மாறி உள்ளனர் என்பதை பாருங்கள். இவ்வாறு பாண்டியராஜன் கூறினார்.


'குற்ற உணர்வோ, ஈரத்தனமோ இருக்காது'


-சின்ன வயதிலேயே பெரிய குற்றம் செய்கின்றனர் என்றால், அது ஒரே நாளில் நடந்து விடுவதில்லை. அவர்கள் சிறு சிறு குற்றங்களை தொடர்ச்சியாக செய்து பழக்கப்பட்டு தான், அடுத்தடுத்து பெரிய குற்றங்களை செய்கின்றனர். பூமிநாதனை வெட்டிக் கொன்ற சிறுவர்களை உளவியல் ரீதியில் பார்த்தால், நிச்சயம் அவர்களுக்கு நடத்தை கோளாறு இருப்பது தெரியும். குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

சிறு வயதிலேயே பெரும் குற்றம் இழைப்போரின் வளர்ப்பு சூழலை உற்று நோக்கினால், பெற்றோரே குற்றம் செய்வோராக இருக்கக் கூடும். அவர்களில் பெரும்பாலான பெற்றோர், குழந்தைகள் முன் திருடுவதும், அதை வீட்டில் வந்து பெருமையாக குறிப்பிடுவோராக இருப்பர். தந்தையே திருடும் போது, நாம் அதை செய்தால் தவறில்லை என்ற மனநிலை குழந்தைக்கும் வந்து விடும். இப்படி வளரும் குழந்தைகளுக்கு, தாம் செய்யும் குற்றத்தால் அடுத்தவருக்கு வலிக்குமே, கஷ்டப்படுவரே என்ற எண்ணம் துளியும் இருக்காது.

அதாவது, கொலையை செய்து விட்டோமே என்ற பதற்றமோ, குற்ற உணர்வோ ஒரு நாளும் இருக்காது. எதிலும் பாவம் பார்க்க மாட்டார்கள், ஈரத் தன்மை என்பது கொஞ்சமும் இருக்காது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் சரியாக படிக்கவில்லை என்றால், ஆசிரியர்கள் அவர்களை படிக்க கட்டாயப்படுத்தினால், ஆசிரியர் மீதே வன்முறையை காட்ட தயாராக இருப்பர். அப்படியொரு மன நிலை சின்ன வயதிலேயே அவர்களுக்கு ஏற்பட்டு விடும். சினிமாவும், சமூக வலைதளங்களும் சிறு வயதிலேயே பலரை குற்றவாளியாக மாற்றுகின்றன.

பெரும்பாலான சினிமாக்களில், சாதாரண நிலையில் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவன், வறுமை நிலையில் இருந்து மீண்டு, மேம்பட்ட நிலைக்கு வர, என்ன திருட்டுத்தனம், குற்றம் வேண்டுமானாலும் செய்யலாம் என்று போதிக்கிறது. அப்படி செய்பவனை ஹீரோவாக காட்டுவதோடு, அவனை மக்கள் போற்றுவதாகவும் படம் எடுக்கின்றனர். இப்படிப்பட்டவர்களை தான், மக்கள் போற்றுகின்றனர் என்ற எண்ணம், சிறு வயது குழந்தைகள் எண்ணத்தில் விதைக்கப்படும் போது, சினிமா ஹீரோ செய்யும் காரியத்தை நிஜத்தில் செய்ய துணிந்து விடுகிறான்.

இப்படிப்பட்ட குழந்தைகளை சிறு வயதிலேயே கண்டறிந்து சரி செய்யவில்லை என்றால், பூமிநாதன் போன்ற கொலைகள் சர்வ சாதாரணமாக நிகழ்த்தப்படும்.

- முனைவர் சித்ரா அரவிந்த், உளவியல் நிபுணர்

- நமது நிருபர் --

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J. G. Muthuraj - bangalore,இந்தியா
25-நவ-202108:40:28 IST Report Abuse
J. G. Muthuraj ஆச்சர்யப்படும்படி இருக்கிறது.. ஆனால் நம்பும்படி இல்லையே... விசாரணையை நீட்டிவிடுங்கள்..
Rate this:
Cancel
23-நவ-202120:05:03 IST Report Abuse
சாம் மாஸ்டர் படத்தின் சமூக பாதிப்பு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X