கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'சஸ்பெண்ட்' அதிகாரி மீதான புகார்; விசாரணை விபரம் வழங்க உத்தரவு

Added : நவ 23, 2021
Share
Advertisement
சென்னை : சிறப்பு டி.ஜி.பி.,க்கு எதிரான புகாரின் விசாரணை விபரங்களை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பெண் எஸ்.பி.,க்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்பட்ட புகாரில், சிறப்பு டி.ஜி.பி., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அவருக்கு எதிரான புகாரை விசாரிக்க, கூடுதல் தலைமை செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஐந்து பேர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு விசாரணையை

சென்னை : சிறப்பு டி.ஜி.பி.,க்கு எதிரான புகாரின் விசாரணை விபரங்களை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் எஸ்.பி.,க்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்பட்ட புகாரில், சிறப்பு டி.ஜி.பி., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அவருக்கு எதிரான புகாரை விசாரிக்க, கூடுதல் தலைமை செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஐந்து பேர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு விசாரணையை முடித்து அரசுக்கு அறிக்கை அளித்தது.

இதையடுத்து, விசாரணை குழு அறிக்கையை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டி.ஜி.பி., மனு தாக்கல் செய்தார். மனுவில், 'விசாரணை குழுவில் இடம் பெற்ற இருவரை நீக்கக்கோரி மனு அளித்தேன். அதை பரிசீலிக்கும் முன், விசாரணை துவங்கப்பட்டு விட்டது. முறையான விசாரணையின்றி அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி வி.பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், 'விசாரணை, நேர்மையாக நடக்கவில்லை. அரசு ஊழியர்கள், சம்பளத்தை நம்பி தான் உள்ளனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட நாளில் இருந்து, வாழ்வாதார ஊதியம் வழங்க உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டது.இதையடுத்து, விசாரணை விபரங்களை சீலிட்ட உறையில் தாக்கல் செய்யவும், மனுதாரரின் குற்றச்சாட்டுக்களுக்கு அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யவும், நீதிபதி பார்த்திபன் உத்தரவிட்டார். விசாரணையை டிசம்பர் 9க்கு தள்ளி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X