பொது செய்தி

தமிழ்நாடு

ஊதிய ஒப்பந்தத்தை வலியுறுத்தி பஸ் ஊழியர்கள் உண்ணாவிரதம்

Added : நவ 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை--அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஊதிய உயர்வை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில், பணிமனைகளின் முன் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில், 1.30 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை, ஒப்பந்தத்தின் வாயிலாக ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது. கடந்த, 2019 ஆகஸ்டுடன், 13வது ஊதிய ஒப்பந்தம் நிறைவு பெற்றது. புதிய

சென்னை--அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஊதிய உயர்வை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில், பணிமனைகளின் முன் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில், 1.30 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை, ஒப்பந்தத்தின் வாயிலாக ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது. கடந்த, 2019 ஆகஸ்டுடன், 13வது ஊதிய ஒப்பந்தம் நிறைவு பெற்றது. புதிய ஊதிய ஒப்பந்தத்தை உறுதி செய்ய வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தின. இதையடுத்து, தொழிற்சங்கத்தினருடன், இரண்டு கட்ட பேச்சை அ.தி.மு.க., ஆட்சியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்தினார். அதில் உடன்பாடு எட்டாததால், தொழிற்சங்கத்தினர் இந்தாண்டு, பிப்., 25, 26, 27 ஆகிய மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், 'அடுத்து தி.மு.க., ஆட்சி அமையும்; அப்போது, போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.அதனால், தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்' என, கோரிக்கை விடுத்தார். அப்போது, அரசும் இடைக்கால நிவாரணம் அறிவித்தது. இதையடுத்து, தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ஆனால், தி.மு.க., ஆட்சி அமைந்து ஆறு மாதங்கள் ஆகியும், இன்னும் ஊதிய ஒப்பந்த பேச்சு துவங்கவில்லை. இதை கண்டித்து, ஆளும்கட்சியுடன் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிற்சங்கம் சார்பில், சென்னை பல்லவன் இல்லம் உட்பட 200 பணிமனைகளில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு உரிய பதிலை அதிகாரிகள் அளிக்காததால், இன்றும் உண்ணாவிரதத்தை தொடர திட்டமிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்து. இந்தியா. இந்துஸ்தான் ரெண்டு வருஷமா வேலையே செய்யாமதானே சம்பளம் வாங்கிட்டு இருந்தீங்க? இன்னும் ரெண்டுவருசம் கழித்து சம்பள உயர்வு கேட்க வேண்டியது தானே? எல்லாமே பொதுமக்கள் தலியில்தான் விடியப்போகுது!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X