சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'யுடியூப்' ஆபாச பேச்சு வீடியோ எதிர்த்து பெண்கள் போராட்டம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
சென்னை-'யுடியூப்' சமூக வலை தளத்தில் ஆபாச பேச்சுடன்'வீடியோ' வெளியிடும், ஜி.பி.முத்து, சூர்யா உள்ளிட்டோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்என வலியுறுத்தி, போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன், ௧௦ பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை, வேப்பேரியில் போலீஸ் கமிஷனர்அலுவலகம் முன், பொது மக்கள் பயன்படுத்தும் நுழைவாயில் அருகே, நேற்று மதியம் 12:15 மணியளவில், 10 பெண்கள் திடீரென

சென்னை-'யுடியூப்' சமூக வலை தளத்தில் ஆபாச பேச்சுடன்'வீடியோ' வெளியிடும், ஜி.பி.முத்து, சூர்யா உள்ளிட்டோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்என வலியுறுத்தி, போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன், ௧௦ பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை, வேப்பேரியில் போலீஸ் கமிஷனர்அலுவலகம் முன், பொது மக்கள் பயன்படுத்தும் நுழைவாயில் அருகே, நேற்று மதியம் 12:15 மணியளவில், 10 பெண்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.யுடியூப் சமூக வலை தளத்தில், ஜி.பி. முத்து, சூர்யா உள்ளிட்டோர் ஆபாச பேச்சுடன் வீடியோ வெளியிட்டு வருவதாகவும்,அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அக்டோபர் 30ல், கமிஷனர் அலுவலகத்தில், மேடவாக்கத்தைச் சேர்ந்த தனம், ௩௦ என்பவர் புகார் அளித்திருந்தார். புகார் மனு விசாரணைக்காக, பரங்கிமலை துணை கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காததால், ஒரு பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து, மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் கூறினர். தங்கள் மீது புகார் அளித்தால், சூர்யா உள்ளிட்டோரின் துாண்டுதலின்படி, இது நடந்துள்ளதாக அவர்கள் கூறினர். புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X