இசை விருந்து படைத்த சாருகேசி நாடகம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இசை விருந்து படைத்த 'சாருகேசி' நாடகம்

Added : நவ 23, 2021
Share
சென்னை-பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் 'சாருகேசி' நாடகம் ரசிகர்களுக்கு, சிறந்த பொழுதுபோக்காகவும், இசை விருந்தாகவும் அமைந்தது.'பிரபல திரைப்பட நடிகரும், நாடக கலைஞருமான ஒய்.ஜி.மகேந்திரனின் யு.ஏ.ஏ., நாடக குழுவின், 70ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, ஓய்.ஜி. மகேந்திரன் இயக்கத்தில், வெங்கட் எழுதிய 'சாருகேசி' நாடகம் சென்னையில் அரங்கேற்றப்பட்டது. இந்நாடகம், ஒய்.ஜி.மகேந்திரனின்,

சென்னை-பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் 'சாருகேசி' நாடகம் ரசிகர்களுக்கு, சிறந்த பொழுதுபோக்காகவும், இசை விருந்தாகவும் அமைந்தது.'பிரபல திரைப்பட நடிகரும், நாடக கலைஞருமான ஒய்.ஜி.மகேந்திரனின் யு.ஏ.ஏ., நாடக குழுவின், 70ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, ஓய்.ஜி. மகேந்திரன் இயக்கத்தில், வெங்கட் எழுதிய 'சாருகேசி' நாடகம் சென்னையில் அரங்கேற்றப்பட்டது. இந்நாடகம், ஒய்.ஜி.மகேந்திரனின், 60ம் ஆண்டு மற்றும் சுப்புனியின், 50ம் ஆண்டு நாடக பயணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.இசை வித்வான் சாருகேசியாக, பிறருக்கு உதவும் குணம் கொண்டவராக ஒய்.ஜி.மகேந்திரன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். உடல்நிலை பாதித்து, தன்னை மறந்தவராக நடித்த போது, மறைந்த நடிகர் சிவாஜியை பார்த்த திருப்தியை ரசிகர்கள் பெற்றனர்.ராஜேஷ் வைத்யாவின் இசையும், அவ்வபோது அரங்கேறிய அனல் பறக்கும் அரசியல் விமர்சனங்களும், ரசிகர்களுக்கு தீபாவளி போனஸாக அமைந்தது. பெயருக்கு ஏற்றாற் போல், சாருகேசி நாடகம் இசை விருந்தாகவும், காமெடி, அரசியல் என போகிற போக்கில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் யு.ஏ.ஏ., நாடக குழு தன் வசமாக்கியது. இசை கலைஞனின் வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழும் திருப்பங்களும், வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை விஷயத்தையும் அழகாக கதைக்களமாக்கி இருந்தனர்.மனைவியாக நடித்த கலாவர்தன், மருமகளாக நடித்த கவுசிகா, ராஜகோபுரமாக நடித்த சுப்புனி அனைவருமே அவரவர் பங்கை கச்சிதமாக செய்திருந்தனர்.காவல் நிலைய காட்சியில், ஒய்.ஜி.மகேந்திரன் ஒவ்வொரு ராகமாக பாட, அதை திருடனாக நடித்தவர் சினிமா பாடலாக பாடி கவர்ந்தார். ஒட்டு மொத்தமாக இரண்டு மணி நேரம் சாருகேசி, அபூர்வ ராகமாக இருந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X