பொது செய்தி

தமிழ்நாடு

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு; தென் மாவட்டங்களுக்கு மழை

Added : நவ 23, 2021
Share
Advertisement
சென்னை : வங்கக்கடலில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது. இது, இலங்கைக்கும், தமிழக தென் மாவட்டங்களுக்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், இன்று மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில், இடி, மின்னலுடன் கன
 வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு; தென் மாவட்டங்களுக்கு மழை

சென்னை : வங்கக்கடலில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது. இது, இலங்கைக்கும், தமிழக தென் மாவட்டங்களுக்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், இன்று மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில், இடி, மின்னலுடன் கன மழை பெய்யும். தென்மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.

நாளை ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியா குமரி மாவட்டங்களில் கன மழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும். நாளை மறுதினம் மற்றும் 26ம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் மிக கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்.

சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும். தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, நாளை தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கைக்கும், தென் மாவட்டங்களுக்கும் இடையே கரையை கடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காலத்தில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, நான்காவது புயல் சின்னமாகும். இந்த தாழ்வு பகுதியால், துாத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X