சென்னை--வீட்டை ஒப்படைக்காமல், அதற்கு இழப்பீடும் தராமல் இழுத்தடிக்கும் கட்டுமான நிறுவனத்துக்கு எதிராக வாரன்ட் பிறப்பிக்க, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, பல்லாவரத்தை அடுத்த திருமுடிவாக்கத்தில் தனியார் நிறுவனம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது.இதில் வீடு வாங்க, லதா தேவி, கனி ஆகியோர் பணம் செலுத்தினர்.இதற்கான ஒப்பந்தப்படி, கட்டுமான நிறுவனம் வீட்டை கட்டி முடித்து ஒப்படைக்கவில்லை என, கூறப்படுகிறது. இது குறித்து பணம் செலுத்தியவர்கள், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் முறையிட்டனர்.இதில், மனுதாரருக்கு உரிய இழப்பீடு வழங்க கட்டுமான நிறுவனத்துக்கு சில மாதங்கள் முன், ஆணைய விசாரணை அதிகாரி உத்தரவிட்டார். இந்த உத்தரவை அந்நிறுவனம் செயல்படுத்தவில்லை என, மனுதாரர்கள் மீண்டும் ஆணையத்தை அணுகினர்.இது தொடர்பாக, ஆணைய விசாரணை அதிகாரி சரவணன் பிறப்பித்த உத்தரவு:வீட்டையும் ஒப்படைக்காமல், இழப்பீடும் தராமல் அந்த கட்டுமான நிறுவனத்துக்கு எதிராக வருவாய் துறை சட்டப்படி வாரன்ட் பிறப்பித்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கலாம்.இவ்வாறு, உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE