வடிகால் பள்ளத்தில் சிக்கிய கன்டெய்னர் லாரி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வடிகால் பள்ளத்தில் சிக்கிய கன்டெய்னர் லாரி

Added : நவ 23, 2021
Share
கோடம்பாக்கம்-கோடம்பாக்கத்தில், மெட்ரொ ரயில் பணிக்கான இரும்பு தடுப்புகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி, மழை நீர் வடிகால் பள்ளத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்தில், பூந்தமல்லி பைபாஸ் -- கலங்கரைவிளக்கம் இடையே, 26.1 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கும் பணிகள் நடக்கின்றன.இதில், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சிக்னலில் இருந்து, விருகம்பாக்கம் 80

கோடம்பாக்கம்-கோடம்பாக்கத்தில், மெட்ரொ ரயில் பணிக்கான இரும்பு தடுப்புகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி, மழை நீர் வடிகால் பள்ளத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்தில், பூந்தமல்லி பைபாஸ் -- கலங்கரைவிளக்கம் இடையே, 26.1 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கும் பணிகள் நடக்கின்றன.இதில், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சிக்னலில் இருந்து, விருகம்பாக்கம் 80 அடி சாலை வரை, ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.கோடம்பாக்கத்தில் இருந்து போரூர் நோக்கி செல்லும் வாகனங்கள், ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் சிக்னலில், இடது புறமாக திரும்பி, அம்பேத்கர் சாலை, அசோக் நகர் 2வது அவென்யூ சாலை, ஜவஹர்லால் நேரு 100 அடி சாலை வழியாக, வடபழநி சிக்னல் வழியாக போரூர் செல்கின்றன.மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் பகுதிகளில், இதற்காக எச்சரிக்கை அளிக்கும் வகையில், மெட்ரோ ரயில் பணிகள் என, எழுதப்பட்ட இரும்பு அறிவிப்பு பலகை வைக்கப்படும்.இந்நிலையில், 13 டன் எடையிலான இரும்பு அறிவிப்பு பலகையை ஏற்றி, கன்டெய்னர் லாரி ஒன்று ஐதராபாதில் இருந்து கோடம்பாக்கம் பவர் ஹவுசிற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு வந்தது.ஆற்காடு சாலை, அம்பேத்கர் சாலை சந்திப்பு நோக்கி கன்டெய்னர் லாரி சென்ற போது, பாரம் தாங்காமல், மழை நீர் வடிகால் பள்ளத்தில் அதன் பின் சக்கரங்கள் சிக்கி கொண்டன.தகவல் அறிந்து வந்த மெட்ரொ ரயில் அதிகாரிகள், ராட்சத கிரேன் வாயிலாக கன்டெய்னர் லாரியை மீட்க முயன்று தோல்வி அடைந்தனர். இதையடுத்து, கன்டெய்னரில் இருந்த இரும்பு தடுப்புகளை இறக்கிய பின், லாரியை மீட்கும் பணியில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X