பொது செய்தி

தமிழ்நாடு

காகித பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., 18 சதவீதம் உயர்வு

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (50)
Share
Advertisement
சென்னை : அட்டைப் பெட்டிகள், காகித பைகள், பேக்கிங் செய்வற்கு பயன்படுத்தப்படும் காகிதம் உள்ளிட்ட பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, 12 சதவீதத்திலிருந்து, 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இது பற்றி, ஸ்ரீ விநாயகா ஸ்கிரீன்ஸ்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராமனாதன் கூறியதாவது: அட்டைப்பெட்டிகள், காகித பைகள், பேக்கிங் காகிதங்கள் ஆகியவற்றுக்கான
GST,Goods and Services Tax,ஜிஎஸ்டி

சென்னை : அட்டைப் பெட்டிகள், காகித பைகள், பேக்கிங் செய்வற்கு பயன்படுத்தப்படும் காகிதம் உள்ளிட்ட பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, 12 சதவீதத்திலிருந்து, 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது பற்றி, ஸ்ரீ விநாயகா ஸ்கிரீன்ஸ்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராமனாதன் கூறியதாவது: அட்டைப்பெட்டிகள், காகித பைகள், பேக்கிங் காகிதங்கள் ஆகியவற்றுக்கான ஜி.எஸ்.டி., 12 சதவீதத்திலிருந்து, 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இது, அச்சுத்துறையில் ஈடுபட்டுள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.


latest tamil news


அச்சு புத்தகங்களுக்கு ஜி.எஸ்.டி., கிடையாது என்றாலும், காகிதங்களுக்கான ஜி,எஸ்.டி., உயர்த்தப்பட்டுள்ளதால், பாட புத்தங்கள் உட்பட அனைத்து புத்தகங்களின் விலையும் உயரும். அட்டைப்பெட்டிகள், பேக்கிங் காகிதங்களுக்கான ஜி.எஸ்.டி., உயர்த்தப்பட்டுள்ளதால், பழங்கள், மருந்து பொருட்கள் போன்ற பொருட்களின் விலையும் உயரும்.

கொரோனா பரவல் காரணமாக பணிகள் இல்லாமல், அச்சு நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. அதனால், எங்களின் கஷ்டத்தை உணர்ந்து, காகித பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., உயர்வை, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - thane,இந்தியா
23-நவ-202118:25:28 IST Report Abuse
rajan இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல .இந்தியா வளருது .என்ன விலை ஏறினால் நமக்கு என்ன .இந்தியா வளருது . பாட புத்தங்கள் உட்பட அனைத்து புத்தகங்களின் விலையும் உயரும். அட்டைப்பெட்டிகள், பேக்கிங் காகிதங்களுக்கான ஜி.எஸ்.டி., உயர்த்தப்பட்டுள்ளதால், பழங்கள், மருந்து பொருட்கள் உங்கள யாரு வாங்க சொன்னா .வாங்காதீங்க .இந்தியா வளருது
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
23-நவ-202117:56:39 IST Report Abuse
Kumar சும்மா இப்படி இவர்களை கதற விடுவது நல்லாதான் இருக்கு. அப்பறமா வரியை குறைத்தால் போதும். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
23-நவ-202116:36:10 IST Report Abuse
Visu Iyer இதை விட ஒரே நாடு ஒரே இந்தியா என்ற வரிசையில் எல்லா மக்களும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். மக்களுக்கு வருமானமே தர கூடாது.. எல்லோருக்கும் அரிசி உணவு உடை கார் பெட்ரோல் உடன், இப்படி எல்லாவற்றையும் இலவசமாக கொடுத்து புதிய இந்தியா உருவாகும் என்று சொல்லிட்டா எப்படி இருக்கும்? கொஞ்சம் கற்பனை தான் செய்து பாருங்களேன்.. ஹாங்.. கற்பனைக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X