பொது செய்தி

தமிழ்நாடு

ஆடு தொட்டியால் சுகாதார சீர்கேடு மருத்துவமனையாக்க வேண்டுகோள்

Added : நவ 23, 2021
Share
Advertisement
அம்பத்துார்--பெயரளவில் உள்ள ஆடு அடிக்கும் தொட்டியால் சுகாதார சீர்கேடும், குடிமகன்களின் அட்டகாசமும் அதிகரித்துள்ளதால், அந்த இடத்தை சுகாதார நிலையமாக மாற்ற வேண்டுமென, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.சென்னை மாநகராட்சி அம்பத்துார் மண்டலத்தின், 82வது வார்டு, மூகாம்பிகை நகர் அருகே, கள்ளிக்குப்பம் - -மாதனாங்குப்பம் சாலையில், மாநகராட்சியின் ஆடு அடிக்கும் தொட்டி உள்ளது. போலீஸ்

அம்பத்துார்--பெயரளவில் உள்ள ஆடு அடிக்கும் தொட்டியால் சுகாதார சீர்கேடும், குடிமகன்களின் அட்டகாசமும் அதிகரித்துள்ளதால், அந்த இடத்தை சுகாதார நிலையமாக மாற்ற வேண்டுமென, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.சென்னை மாநகராட்சி அம்பத்துார் மண்டலத்தின், 82வது வார்டு, மூகாம்பிகை நகர் அருகே, கள்ளிக்குப்பம் - -மாதனாங்குப்பம் சாலையில், மாநகராட்சியின் ஆடு அடிக்கும் தொட்டி உள்ளது. போலீஸ் அலட்சியம்மாதனாங்குப்பத்தில் உள்ள இந்த ஆடு அடிக்கும் தொட்டியில், புதன் மற்றும் ஞாயிறன்று மட்டும், 20 முதல் 30 ஆடுகள் வரை வெட்டப்படுகின்றன.மற்ற நாட்களில், வெட்டப்படுவதில்லை. அதனால், அங்கு கஞ்சா விற்பனை மற்றும் குடிமகன்களின் அட்டகாசம் அதிகரித்துஉள்ளது. மேலும், அதன் அருகில் உள்ள காவல் உதவி மையமும் செயல்பாடின்றி உள்ளதால், சட்டவிரோத செயல்கள் தடையின்றி தொடர்கின்றன. இதனால், பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர். இது குறித்து, அம்பத்துார் போலீசில் புகார் செய்தாலும் கண்டுகொள்வதில்லை. 10 கி.மீ.,யில் மருத்துவம்அதனால், மேற்கண்ட ஆடு அடிக்கும் தொட்டியை அகற்றி விட்டு, பொதுமக்களுக்கு உதவும் வகையில், மாநகராட்சி சுகாதார நிலையத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துஉள்ளது.ஆடு அடிக்கும் தொட்டியின் சுற்றுவட்டாரத்தில், கள்ளிக்குப்பம்- - மாதனாங்குப்பம் சாலையை ஒட்டி கலெக்டர் நகர், மூகாம்பிகை நகர், முத்தமிழ் நகர் என, 10க்கும் மேற்பட்ட நகர்கள், கள்ளிக்குப்பம், மாதனாங்குப்பம், புத்தகரம், வாட்டர் கெனால் சாலை உள்ளிட்ட பிரதான பகுதிகள் உள்ளன. அவற்றில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.அவர்கள், அவசர மருத்துவ சிகிச்சைக்காக 5 முதல் 10 கி.மீ., துாரத்தில் உள்ள புழல், கொளத்துார், கொரட்டூர், பாடி, அம்பத்துார், ஒரகடம் ஆகிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மழைக்கால போராட்டம்அதனால், மாதனாங்குப்பத்தில், மாநகராட்சி மருத்துவமனை அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X