ஆகாய தாமரை தாவரங்கள் ரெட்டேரியில் மீண்டும் அகற்றம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆகாய தாமரை தாவரங்கள் ரெட்டேரியில் மீண்டும் அகற்றம்

Added : நவ 23, 2021
Share
புழல்--குடியிருப்புகளில் வெள்ள பாதிப்பை தவிர்க்க, மாதவரம் ரெட்டேரியில் ஆகாய தாமரை தாவரங்கள் அகற்றும் பணி துவங்கியது.சென்னை மாதவரம், ரெட்டேரி பலத்த மழையால் நிரம்பி வெளியேறும் உபரி நீர், புழல் எம்.ஜி.ஆர்., நகர் கலங்கல் வழியாக கால்வாயில் பாய்ந்து, எண்ணுார் கடலுக்குச் செல்கிறது. இதனால், கால்வாயை ஒட்டிய அறிஞர் அண்ணா நகரில் உள்ள வீடுகள், மழை வெள்ளம் மற்றும் ஏரியின் உபரி

புழல்--குடியிருப்புகளில் வெள்ள பாதிப்பை தவிர்க்க, மாதவரம் ரெட்டேரியில் ஆகாய தாமரை தாவரங்கள் அகற்றும் பணி துவங்கியது.சென்னை மாதவரம், ரெட்டேரி பலத்த மழையால் நிரம்பி வெளியேறும் உபரி நீர், புழல் எம்.ஜி.ஆர்., நகர் கலங்கல் வழியாக கால்வாயில் பாய்ந்து, எண்ணுார் கடலுக்குச் செல்கிறது. இதனால், கால்வாயை ஒட்டிய அறிஞர் அண்ணா நகரில் உள்ள வீடுகள், மழை வெள்ளம் மற்றும் ஏரியின் உபரி நீரில் மூழ்கின.அங்கிருந்தவர்கள், புழல் காந்தி பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். மாதவரம் ரெட்டேரியின் மற்றொரு முனையான, புழல் லட்சுமிபுரம் அருகே ரெட்டேரியின் பெரும்பகுதியில் ஆகாய தாமரை தாவரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. பருவ மழைக்கு முன்பாக, அவற்றில் ஓரளவு அகற்றப்பட்டு, அங்குள்ள கலங்கலை அடைத்து குவிக்கப்பட்டது.அவை முழுமையாக அகற்றப்படாததால், ஏரியில் இருந்து அங்குள்ள கலங்கல் வழியாக சிறிதளவு தண்ணீர் மட்டுமே வெளியேறி, அருகில் உள்ள கால்வாயில் பாய்ந்தது. இதனால், ஏரியின் மறுமுனையில் உள்ள எம்.ஜி.ஆர்., நகர், அறிஞர் அண்ணா நகர் வீடுகளில் ஏரி நீர் புகுந்தது.இந்த நிலையில், வரும் 25ம் தேதி வரை பலத்த மழை தொடரும் என்பதால், லட்சுமிபுரம் கலங்கல் அருகே, ஏரியில் வளர்ந்துள்ள ஆகாய தாமரையை அகற்றும் பணி, மீண்டும் நேற்று காலை துவங்கியது.ஏரியில் இருந்து அகற்றப்படும் ஆகாய தாமரை, வழக்கம் போல் கலங்கல் அருகிலேயே குவிக்கப்படுகிறது.அவற்றை ஏரியில் இருந்தும், கரையில் இருந்தும் முழுமையாக அகற்றினால் தான், உபரி நீர் குடியிருப்புகளை மூழ்கடிக்காமல் கால்வாயில் பாயும். நீர் வளத்துறையின் திட்டமிடாத பணிகளால், பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X