சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகை, பணம் திருடிய மூவருக்கு 'காப்பு'

Added : நவ 23, 2021
Share
Advertisement
செங்குன்றம்--சென்னை செங்குன்றம் அடுத்த தீர்த்தகிரையம்பட்டு, விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் முஜிபுர் ரகுமான், 39; செங்குன்றத்தில், நகைக்கு மெருகு போடும் கடை நடத்துகிறார்.கடந்த 6ம் தேதி இரவு, அங்குள்ள சினிமா தியேட்டருக்கு படம் பார்க்கச் சென்றார். இந்நிலையில், அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 9 சவரன் நகை, 25 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 1 கிலோ

செங்குன்றம்--சென்னை செங்குன்றம் அடுத்த தீர்த்தகிரையம்பட்டு, விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் முஜிபுர் ரகுமான், 39; செங்குன்றத்தில், நகைக்கு மெருகு போடும் கடை நடத்துகிறார்.கடந்த 6ம் தேதி இரவு, அங்குள்ள சினிமா தியேட்டருக்கு படம் பார்க்கச் சென்றார். இந்நிலையில், அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 9 சவரன் நகை, 25 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை திருடு போயின. புகாரின்படி விசாரித்த செங்குன்றம் போலீசார், சென்னை வியாசர்பாடி, கன்னிகாபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன், 24; கல்யாணபுரத்தைச் சேர்ந்த பாலச்சந்தர், 30; தினேஷ்பாபு, 29, ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 சவரன் நகை, 300 கிராம் வெள்ளி பொருட்கள், 1 இரு சக்கர வாகனம், 5,000 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அம்பத்துார் அடுத்த திருவேற்காடு, மாதிரவேடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வன், 54. சுயதொழில் செய்து வருகிறார். இவர், சில தினங்களுக்கு முன் நாகப்பட்டினத்திற்கு சென்றார். பின், நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பினார். அப்போது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, 15 சவரன் நகை, 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகை மற்றும் 45 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருடு போயிருந்தன. இது குறித்து, திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X