சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேர் அகப்பட்டனர்

Added : நவ 23, 2021
Share
Advertisement
அயனாவரம்-அயனாவரத்தைச் சேர்ந்தவர் சிவா அனந்த், 46; ஆட்டோ ஓட்டுனர். இவர் நேற்று காலை, அயனாவரம் கே.எச்., சாலை சந்திப்பில் ஆட்டோவில் சென்றார். அப்போது அவ்வழியாக வந்த நான்கு மர்ம நபர்கள், சிவாவை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, ௧,௦௦௦ ரூபாயை பறித்துள்ளனர்.இது குறித்து, அயனாவரம் காவல் நிலையத்தில் சிவா புகாரளித்தார். இதன்படி, புளியந்தோப்பைச் சேர்ந்த மனிஷ் குமார் 25,

அயனாவரம்-அயனாவரத்தைச் சேர்ந்தவர் சிவா அனந்த், 46; ஆட்டோ ஓட்டுனர். இவர் நேற்று காலை, அயனாவரம் கே.எச்., சாலை சந்திப்பில் ஆட்டோவில் சென்றார். அப்போது அவ்வழியாக வந்த நான்கு மர்ம நபர்கள், சிவாவை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, ௧,௦௦௦ ரூபாயை பறித்துள்ளனர்.இது குறித்து, அயனாவரம் காவல் நிலையத்தில் சிவா புகாரளித்தார். இதன்படி, புளியந்தோப்பைச் சேர்ந்த மனிஷ் குமார் 25, அயனாவரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம், 25, சார்லஸ், 26, ஹரிஷ்குமார், 21, ஆகியோரை நேற்று கைது செய்தனர். சென்னை, சூளை தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் விக்கி, 23. இவரது கூட்டாளி கோகுலகிருஷ்ணன், 19. இருவரும் அப்பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களை பெரியமேடு போலீசார் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் யுவராஜ், 25; ஆட்டோ ஓட்டுனர். இவர், நேற்று புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் ஆட்டோ ஓட்டி வந்த போது வழிமறித்து, கைகடிகாரம் மற்றும் பணம் பறிக்க முயன்ற, புரசைவாக்கம், திடீர் நகரை சேர்ந்த, ௧௭ வயது சிறுவனை, வேப்பேரி போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X