சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பால்கனி' இடிந்து 2 பெண்கள் காயம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
திரு.வி.க.நகர்--திரு.வி.க.நகர் மண்டலம், 68வது வார்டுக்குட்பட்ட பெரம்பூர், சபாபதி தெருவில், 30 ஆண்டுகள் பழமையான மாடி வீடு உள்ளது. இந்த வீட்டின் சுவர்கள் மழையால் வலுவிழந்து காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.இந்த வீட்டில் தரைதளம் மற்றும் முதல் தளத்தில், ஐந்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. நேற்று காலை, இந்த கட்டடத்தின் தரைதளத்தில் நின்று சுதா, 36, மோகனா, 48, ஆகிய

திரு.வி.க.நகர்--திரு.வி.க.நகர் மண்டலம், 68வது வார்டுக்குட்பட்ட பெரம்பூர், சபாபதி தெருவில், 30 ஆண்டுகள் பழமையான மாடி வீடு உள்ளது. இந்த வீட்டின் சுவர்கள் மழையால் வலுவிழந்து காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.இந்த வீட்டில் தரைதளம் மற்றும் முதல் தளத்தில், ஐந்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. நேற்று காலை, இந்த கட்டடத்தின் தரைதளத்தில் நின்று சுதா, 36, மோகனா, 48, ஆகிய இரண்டு பெண்கள் பேசிக்கொண்டிருந்த போது, திடீரென முதல் தளத்தின் பால்கனி சுவர் இடிந்து, கிழே விழுந்தது.இதில், சுதாவிற்கு கை மற்றும் காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. மோகனாவிற்கு இடுப்பில் லேசான காயம் ஏற்பட்டது. அங்கிருந்தோர் அவர்களை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். ஜெயலட்சுமி என்பவருக்கும், தலையில் லேசான காயம் ஏற்பட்டது.தகவல் அறிந்த செம்பியம் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று, அபாய வீட்டில் இருந்து பொதுமக்களை மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X