சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கலப்பட ஆயில் கடத்திய மூன்று பேர் சிக்கினர்

Added : நவ 23, 2021
Share
Advertisement
அம்பத்துார்--டேங்கர் லாரி, வேன் ஆகிய வாகனங்களில், கலப்பட ஆயில் கடத்திய மூவர் கைதாகினர்.சென்னை அம்பத்துார் அடுத்த பட்டரவாக்கம், பிடாரி அம்மன் கோவில் அருகே, குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார், நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, டேங்கர் லாரி மற்றும் வேனில் கடத்தப்பட்ட, 9,000 லிட்டர் கலப்பட ஆயில் சிக்கியது. இது தொடர்பாக, அம்பத்துாரை சேர்ந்த

அம்பத்துார்--டேங்கர் லாரி, வேன் ஆகிய வாகனங்களில், கலப்பட ஆயில் கடத்திய மூவர் கைதாகினர்.சென்னை அம்பத்துார் அடுத்த பட்டரவாக்கம், பிடாரி அம்மன் கோவில் அருகே, குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார், நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, டேங்கர் லாரி மற்றும் வேனில் கடத்தப்பட்ட, 9,000 லிட்டர் கலப்பட ஆயில் சிக்கியது. இது தொடர்பாக, அம்பத்துாரை சேர்ந்த சசிகுமார், 41; முத்துராசா, 60; முத்துகிருஷ்ணன், 38; ஆகியோர் சிக்கினர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், கலப்பட ஆயிலை, கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய, மாதவரத்தில் இருந்து, மதுரவாயலுக்கு, கடத்தி சென்றது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், கலப்பட ஆயில், டேங்கர் லாரி, வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X