பொது செய்தி

தமிழ்நாடு

'அபாகஸ்' கணக்கீட்டு முறை சாதனை புத்தகத்தில் மாணவர்கள்

Added : நவ 23, 2021
Share
Advertisement
கே.கே. நகர்- -'அபாகஸ்' கணக்கீட்டு முறையில், எஸ்.ஐ.பி., அபாகஸ் அகாடமி மாணவர்கள் 'கலாம் உலக சாதனை' புத்தகத்தில் இடம் பிடித்தனர்.சென்னை, கே.கே.நகர், லட்சுமண சாமி சாலையில், எஸ்.ஐ.பி., அபாகஸ் அகாடமி உள்ளது. இங்கு, அபாகஸ் முறையில், அதிக எண்ணிக்கையிலான எண்கள் கொண்ட கணக்குகளுக்கு, தீர்வு காண்பது குறித்து, மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது.இந்நிலையில், குறைந்த நேரத்தில் அதிக

கே.கே. நகர்- -'அபாகஸ்' கணக்கீட்டு முறையில், எஸ்.ஐ.பி., அபாகஸ் அகாடமி மாணவர்கள் 'கலாம் உலக சாதனை' புத்தகத்தில் இடம் பிடித்தனர்.சென்னை, கே.கே.நகர், லட்சுமண சாமி சாலையில், எஸ்.ஐ.பி., அபாகஸ் அகாடமி உள்ளது. இங்கு, அபாகஸ் முறையில், அதிக எண்ணிக்கையிலான எண்கள் கொண்ட கணக்குகளுக்கு, தீர்வு காண்பது குறித்து, மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது.இந்நிலையில், குறைந்த நேரத்தில் அதிக கணக்குகளுக்கு தீர்வு காணும் உலக சாதனை முயற்சி, நேற்று மாலை அகாடமியில் நடந்தது. இதில், அகாடமியைச் சேர்ந்த, 13 மாணவர்கள்,வகுத்தல், பெருக்கல், கூட்டல் என, தலா நுாறு கணக்குகள் வீதம், 300 கணக்குகளுக்கு, 12 நிமிடத்தில் தீர்வு கண்டு, உலக சாதனை முயற்சி மேற்கொண்டனர்.இதில், அகாடமியில் படித்த இரு மாணவர்கள்,துபாய், கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, காணொலி காட்சி வாயிலாக, சாதனை முயற்சியில் பங்கேற்றனர். இந்த சாதனை, 'கலாம் உலக சாதனை' நிறுவனத்தால் அங்கிகரிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X