பொது செய்தி

இந்தியா

சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் 600 'டிஜிட்டல்' கடன் நிறுவனங்கள்

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி : இந்தியாவில் சட்டத்துக்கு புறம்பாக, மொபைல் போன் செயலிகள் வாயிலாக, கடன் வழங்கும் வணிகத்தை மேற்கொண்டு வரும் நிறுவனங்கள் அதிகரித்து வருவதாக, ரிசர்வ் வங்கி பணிக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், நாட்டில் 600க்கும் மேற்பட்ட டிஜிட்டல் கடன் நிறுவனங்கள், சட்டத்துக்கு புறம்பான வகையில் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதுடில்லி : இந்தியாவில் சட்டத்துக்கு புறம்பாக, மொபைல் போன் செயலிகள் வாயிலாக, கடன் வழங்கும் வணிகத்தை மேற்கொண்டு வரும் நிறுவனங்கள் அதிகரித்து வருவதாக, ரிசர்வ் வங்கி பணிக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



இந்த அறிக்கையில், நாட்டில் 600க்கும் மேற்பட்ட டிஜிட்டல் கடன் நிறுவனங்கள், சட்டத்துக்கு புறம்பான வகையில் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் 'ஆண்ட்ராய்டு' போனில் செயலிகள் வாயிலாக செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவில் மட்டும், கிட்டத்தட்ட 1,100 கடன் வழங்கும் செயலிகள் செயல்பட்டு வருவது ஆய்வில் தெரியவந்து உள்ளது.இந்த நிறுவனங்கள் குறித்து வரும் புகார்களும் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு ஜனவரி முதல், நடப்பு ஆண்டு மார்ச் வரையிலான காலத்தில் மட்டும், கிட்டத்தட்ட 2,562 புகார்கள் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.


latest tamil news



இந்த புகார்களில் பெரும்பாலானவை, ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்படாத நிறுவனங்கள் சம்பந்தமாக வந்தவை ஆகும்.இத்தகைய நிறுவனங்கள் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என தெரிகிறது. வாடிக்கையாளர்களின் நலனை காக்கும் வகையில், இதற்கென தனி சட்டத்தை இயற்றவும், ரிசர்வ் வங்கியின் பணிக்குழு பரிந்துரைத்துள்ளது.

இணையதளங்கள் மற்றும் மொபைல் போன் செயலிகள் வாயிலாக டிஜிட்டல் கடன்கள் வழங்கப்படுவது குறித்து ஆராய்வதற்காக கடந்த ஜனவரி மாதத்தில், இந்த பணிக்குழுவை ரிசர்வ் வங்கி அமைத்தது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-நவ-202109:02:08 IST Report Abuse
அப்புச்சாமி ஆமாம். விதிகளுக்குட்படு செயல்படும் நிறுவனத்திடம் போனா, ஒரு 5000 ரூவா கடன் வாங்கறதுக்குள்ளே தாவு தீந்துரும். சொந்த வீடு, நிலம் இருக்கா? பத்திரத்தை கொண்டா. இல்லையா, சொந்த வீடு இருக்குறவங்க நாலு பேர் சாட்சிக்கையெழுத்து போட கூட்டி வா. இல்லெ, பேங்க் பேலன்ஸ் ரெண்டு,மூணு கோடி வெச்சிருக்கியா? மாசம் 10 லட்சம் சம்பளம் வாங்குறியான்னு ஆதாரம் கேட்பார்கள். இதுக்கு அடகு கடையே பெட்டர். இப்போ, டிஜிட்டல் இந்தியா புண்ணியத்தில் கடன் கிடைக்குது. பொறுப்பா இருக்குறவன் கடன் வாங்க மாட்டான். பொறுப்பில்லாதவன் கடன் வாங்கிட்டு அரசு கிட்டே அப்பாவி மாதிரி கம்ப்ளைண்ட் குடுப்பான்.
Rate this:
Cancel
23-நவ-202109:01:58 IST Report Abuse
அப்புச்சாமி ஆமாம். விதிகளுக்குட்படு செயல்படும் நிறுவனத்திடம் போனா, ஒரு 5000 ரூவா கடன் வாங்கறதுக்குள்ளே தாவு தீந்துரும். சொந்த வீடு, நிலம் இருக்கா? பத்திரத்தை கொண்டா. இல்லையா, சொந்த வீடு இருக்குறவங்க நாலு பேர் சாட்சிக்கையெழுத்து போட கூட்டி வா. இல்லெ, பேங்க் பேலன்ஸ் ரெண்டு,மூணு கோடி வெச்சிருக்கியா? மாசம் 10 லட்சம் சம்பளம் வாங்குறியான்னு ஆதாரம் கேட்பார்கள். இதுக்கு அடகு கடையே பெட்டர். இப்போ, டிஜிட்டல் இந்தியா புண்ணியத்தில் கடன் கிடைக்குது. பொறுப்பா இருக்குறவன் கடன் வாங்க மாட்டான். பொறுப்பில்லாதவன் கடன் வாங்கிட்டு அரசு கிட்டே அப்பாவி மாதிரி கம்ப்ளைண்ட் குடுப்பான்.
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
23-நவ-202107:57:58 IST Report Abuse
rajan அதான் தெரிஞ்சுடுத்தே அப்ரம் என்னா ரோஜன. : சட்டிட்டுன்னு நடவடிக்க எடுக்காம கால நேரம் பார்த்து குனு இருக்கிங்க. சினிமா போலீஸ் மாதிரி கடைசி வரை கம்முனு இருப்பீங்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X