பொது செய்தி

தமிழ்நாடு

குப்பை தொட்டியில் இருந்து வடியும் கழிவு நீர் நோய் பாதிப்பை தடுக்க நடவடிக்கை தேவை

Added : நவ 23, 2021
Share
Advertisement
அடையாறு--குப்பை தொட்டியில் செல்லும் மழை நீர், கழிவு நீராக வெளியேறுகிறது.இதனால் ஏற்படும் தொற்று நோய் பாதிப்பை தடுக்க, தொட்டிகளை சுற்றி அடிக்கடி சுண்ணாம்பு போட்டு சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சென்னையில், பருவமழை பெய்து வருகிறது. சில இடங்களில் மழை நின்று பல நாட்கள் ஆகியும் தண்ணீர் வடியவில்லை. சென்னை மாநகராட்சி சார்பில், துாய்மை பணி

அடையாறு--குப்பை தொட்டியில் செல்லும் மழை நீர், கழிவு நீராக வெளியேறுகிறது.இதனால் ஏற்படும் தொற்று நோய் பாதிப்பை தடுக்க, தொட்டிகளை சுற்றி அடிக்கடி சுண்ணாம்பு போட்டு சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சென்னையில், பருவமழை பெய்து வருகிறது. சில இடங்களில் மழை நின்று பல நாட்கள் ஆகியும் தண்ணீர் வடியவில்லை. சென்னை மாநகராட்சி சார்பில், துாய்மை பணி மேற்கொள்ள தெருக்களில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது.மூடி இருந்தாலும், பெரும்பாலான தொட்டிகள் திறந்தே உள்ளன. அதில் சேரும் மழை நீர், குப்பையுடன் கலந்து கழிவு நீராக சாலையில் வடிகிறது. சில தெருக்களில், ஒரே இடத்தில் 10 தொட்டிகள் வரை வைக்கப்பட்டுள்ளன.தொட்டியில் இருந்து வடியும் கழிவு நீரில் பாதசாரிகள் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால், சேற்றுப்புண், தொற்று நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.தொட்டியில் இருந்து வடியும் கழிவு நீரால் ஏற்படும் நோய் பாதிப்பை தடுக்க, தொட்டியை சுற்றி, அடிக்கடி சுண்ணாம்பு போட்டு துாய்மையாக வைத்திருக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X