காலி மனையில் குப்பை, கழிவு நீரால் சுகாதார சீர்கேடு

Added : நவ 23, 2021
Share
Advertisement
சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலம், உள்ளகரம், பெருமாள் நகர், 2வது மெயின்ரோடு, 3வது குறுக்கு தெருவில் காலிமனை உள்ளது. அதில், ஏராளமான குப்பை கொட்டப்பட்டு வருகிறது. மழை நீர் வடிகாலில் உடைப்பு காரணமாக, அதில் வெளியாகும் கழிவு நீர், காலிமனையில் சங்கமித்து வருகிறது.இதனால், அப்பகுதியில் எப்போதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கொசு உற்பத்தியும் அதிகரித்து சுற்று

சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலம், உள்ளகரம், பெருமாள் நகர், 2வது மெயின்ரோடு, 3வது குறுக்கு தெருவில் காலிமனை உள்ளது. அதில், ஏராளமான குப்பை கொட்டப்பட்டு வருகிறது. மழை நீர் வடிகாலில் உடைப்பு காரணமாக, அதில் வெளியாகும் கழிவு நீர், காலிமனையில் சங்கமித்து வருகிறது.இதனால், அப்பகுதியில் எப்போதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கொசு உற்பத்தியும் அதிகரித்து சுற்று வட்டாரப் பகுதிகளில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி சுகாதாரத்துறையினர் நேரில் ஆய்வு செய்து, காலிமனையில் சேகரமாகும் கழிவுநீர், குப்பையை உடனடியாக அகற்றி 'பிளீசிங் பவுடர்' துாவ வேண்டும்.எதிர்காலத்தில் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், சம்பந்தப்பட்ட நில உரிமையாளர் மீது மாநகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X