சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ள உறவு வைத்திருந்த மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்தவர் கைது

Added : நவ 23, 2021
Share
Advertisement
சென்னை : கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்து, மேற்கு வங்கத்திற்கு தப்பிய கணவரை போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த, அனுப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே, கடந்த, 13ம் தேதி பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலையுண்டு கிடந்தார்.போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டதில், மீஞ்சூர் அடுத்த, மேலுார் கிராமத்தை சேர்ந்த
 கள்ள உறவு வைத்திருந்த மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்தவர் கைது

சென்னை : கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்து, மேற்கு வங்கத்திற்கு தப்பிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த, அனுப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே, கடந்த, 13ம் தேதி பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலையுண்டு கிடந்தார்.போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டதில், மீஞ்சூர் அடுத்த, மேலுார் கிராமத்தை சேர்ந்த மீனா, 20, என்பது தெரிந்தது. கட்டட தொழிலாளியான இவர், தன்னுடன் வேலை பார்த்து வந்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த முதர்சன், 25, என்பவரை, காதலித்து ஒராண்டுக்கு முன் திருமணம் செய்து உள்ளார்.

கடந்த, 12ம் தேதி, வேலைக்கு செல்வதாக கூறி இருவரும் சென்ற நிலையில், அடுத்த நாள், மீனா கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.மனைவியை கொலை செய்துவிட்டு, முதர்சன் மேற்கு வங்கம் மாநிலத்திற்கு தப்பியது விசாரணையில் தெரிய வந்தது.

அதை தொடர்ந்து தனிப்படை போலீசார், மேற்கு வங்கம் சென்று, முதர்சனை கைது, பொன்னேரி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.முதர்சனின் மனைவி வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும், அவர் அடிக்கடி கள்ளக்காதலனுடன் மொபைல் போனில் பேசியதை கண்டித்தும், அதை கேட்காததால், ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X