15 அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு| Dinamalar

15 அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு

Added : நவ 23, 2021
Share
ஜெய்பூர் : ராஜஸ்தானில் புதிதாக பொறுப்பேற்றுள்ள 15 அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. உள்துறை நிதி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் முதல்வர் வசமே உள்ளன.ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங். ஆட்சி நடக்கிறது. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் தன் ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி தரும்படி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.இதன்
 15 அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு

ஜெய்பூர் : ராஜஸ்தானில் புதிதாக பொறுப்பேற்றுள்ள 15 அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. உள்துறை நிதி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் முதல்வர் வசமே உள்ளன.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங். ஆட்சி நடக்கிறது. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் தன் ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி தரும்படி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.இதன் தொடர்ச்சியாக சச்சின் பைலட் ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி தர அசோக் கெலாட் முன்வந்தார்.

அதன்படி நேற்று முன்தினம் அமைச்சரவை விரிவாக்கம் நடந்தது. இதில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் ஐந்து பேர் உட்பட 15 பேருக்கு அமைச்சர் பதவி தரப்பட்டது.புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களுக்கு இலாகாக்கள் நேற்று ஒதுக்கப்பட்டன.

டாக்டர் பி.டி.கல்லாவுக்கு கல்வி சமஸ்கிருத கல்வி கலை இலக்கியம் மற்றும் கலாசார துறை வழங்கப்பட்டது. உள்ளாட்சி ஊரக வளர்ச்சி சட்ட துறை அமைச்சராக சாந்தி தாரிவால் நியமிக்கப்பட்டார்.உள்துறை நிதி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் முதல்வர் வசமே உள்ளன. மூன்று சுயேச்சைகள் உட்பட ஆறு பேர் முதல்வரின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X