தமிழகம் - கேரளா இடையே நிலவி வரும் அனைத்து பிரச்னைகளுக்கும் இறுதி தீர்வு கிடைக்குமா?| Dinamalar

தமிழகம் - கேரளா இடையே நிலவி வரும் அனைத்து பிரச்னைகளுக்கும் இறுதி தீர்வு கிடைக்குமா?

Added : நவ 23, 2021
Share
புதுடில்லி : 'முல்லை பெரியாறு அணையின் நீர் தேக்க அளவு, பாதுகாப்பு தொடர்பாக தமிழகம் - கேரளா இடையே நிலவி வரும் அனைத்து பிரச்னைகளுக்கும் இறுதி தீர்வு காணும் வழக்கு டிச., 10ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.கேரள மாநிலம் இடுக்கியில் 1895ல் கட்டப்பட்டது முல்லைப் பெரியாறு அணை. இதன் பராமரிப்பு தமிழக அரசின் கட்டுப்பாட்டில்
TN,Tamilnadu,kerala,கேரளா,தமிழகம்,தமிழ்நாடு

புதுடில்லி : 'முல்லை பெரியாறு அணையின் நீர் தேக்க அளவு, பாதுகாப்பு தொடர்பாக தமிழகம் - கேரளா இடையே நிலவி வரும் அனைத்து பிரச்னைகளுக்கும் இறுதி தீர்வு காணும் வழக்கு டிச., 10ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.


கேரள மாநிலம் இடுக்கியில் 1895ல் கட்டப்பட்டது முல்லைப் பெரியாறு அணை. இதன் பராமரிப்பு தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.உத்தரவு தேவையில்லைஅணையில் நீரைத் தேக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், சி.டி.ரவிகுமார் அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது கேரள தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா ''நீர் நிலைகள் கண்காணிப்புக் குழுவின் கண்காணிப்பில் அணை இருப்பதால் அவசர உத்தரவு தேவைஇல்லை. இருப்பினும் தமிழக அரசு பரிந்துரைத்துள்ள விதிமுறைகள் தொடர்பாக எழுப்பப்பட்ட ஆட்சேபனைகளுக்கு தீர்வு காண வேண்டும்'' என்றார்.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இருதரப்பு வாதங்களையும் நேர்மையான முறையில் கேட்டோம். இந்த கட்டத்தில் உடனடி வழிகாட்டுதல் தேவையில்லை என இருதரப்பிலும் கூறப்படுகிறது.

மாறாக முக்கிய விவகாரத்தை விரைந்து முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய நடவடிக்கையை விரைவுபடுத்துவதற்கான கோரிக்கையை ஏற்பதில் எங்களுக்கு எந்த சிரமமும் இல்லை.முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழகம் - கேரளா இடையே நிலவி வரும் அனைத்து பிரச்னைகளுக்கும் இறுதி தீர்வு காணும் வழக்கு டிச., 10ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

அதுவரை அணையில் 142 அடி அளவு நீரை தேக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவு தொடரும். கண்காணிப்புக்குழு மத்திய நீர்வள ஆணையம் இருமாநில அரசுகள் தேர்ந்தெடுத்த முடிவுகளே தொடரும். அணையின் நீர்கசிவு தொடர்பாக தற்போதைக்கு எதுவும் பேச வேண்டாம்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X