சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தந்தையை அடித்து கொலை செய்த மனநலம் பாதித்த மகன் கைது

Added : நவ 23, 2021
Share
Advertisement
வெங்கத்துார்-வெங்கத்துார் கிராமத்தில் தந்தையை உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்த, மனநலம் பாதிக்கப்பட்ட மகனை போலீசார் கைது செய்தனர்.கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 50; கூலித்தொழிலாளி. இவரது ஒரே மகன் பாண்டியன், 28. சிறுவயதிலிருந்தே மனநலம் பாதிக்கப்பட்ட பாண்டியன், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம்

வெங்கத்துார்-வெங்கத்துார் கிராமத்தில் தந்தையை உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்த, மனநலம் பாதிக்கப்பட்ட மகனை போலீசார் கைது செய்தனர்.கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 50; கூலித்தொழிலாளி. இவரது ஒரே மகன் பாண்டியன், 28. சிறுவயதிலிருந்தே மனநலம் பாதிக்கப்பட்ட பாண்டியன், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் பாலகிருஷ்ணனின் மனைவி மகேஷ்வரி, வேலையின் காரணமாக உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். வீட்டில் பாலகிருஷ்ணன், அவரது மகன் பாண்டியன் ஆகியோர் இருந்தனர்.மின் தடைநள்ளிரவு நேரத்தில் மின்சாரம் தடைபட்டதால், பாலகிருஷ்ணன் தன் மகன் பாண்டியனிடம் மெழுகுவர்த்தி கேட்ட போது இருவருக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த பாண்டியன், வீட்டில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து, தந்தை பாலகிருஷ்ணனை தலையில் சரமாரியாக தாக்கியதில், பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.மணவாள நகர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பாலகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பாண்டியனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி, பாண்டியனை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X