சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளக்காதல் விவகாரம் மனைவி கொலை; கணவர் கைது

Added : நவ 23, 2021
Share
Advertisement
மீஞ்சூர்--கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்துவிட்டு, மேற்கு வங்கத்திற்கு தப்பிய கணவரை போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த, அனுப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே, கடந்த, 13ம் தேதி பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலையுண்டு இருந்தார்.போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டதில், மீஞ்சூர் அடுத்த, மேலுார் கிராமத்தைச்

மீஞ்சூர்--கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்துவிட்டு, மேற்கு வங்கத்திற்கு தப்பிய கணவரை போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த, அனுப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே, கடந்த, 13ம் தேதி பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலையுண்டு இருந்தார்.போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டதில், மீஞ்சூர் அடுத்த, மேலுார் கிராமத்தைச் சேர்ந்த மீனா, 20, என்பது தெரிந்தது.கட்டட தொழிலாளியான இவர், தன்னுடன் வேலை பார்த்து வந்த மேற்குவங்க மாநிலத்தைச்சேர்ந்த முதர்சன், 25, என்பவரை, காதலித்து ஒராண்டுக்கு முன் திருமணம் செய்து உள்ளார்.கடந்த, 12ம் தேதி, வேலைக்கு செல்வதாக கூறி இருவரும் சென்ற நிலையில், அடுத்த நாள், மீனா கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.மனைவியை கொலை செய்துவிட்டு, முதர்சன் மேற்கு வங்கம் மாநிலத்திற்கு தப்பியது விசாரணையில் தெரிய வந்தது.அதை தொடர்ந்து தனிப்படை போலீசார், மேற்கு வங்கம் சென்று, முதர்சனை கைது, பொன்னேரி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்துக் கொண்டு, அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்ததை கண்டித்தும், தொடர்ந்ததால் முதர்சன் அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டால் தான் கொலைக்கான காரணம் குறித்து முழுமையான விபரம் தெரிய வரும் என, மீஞ்சூர் போலீசார் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X