பள்ளிப்பட்டு அரசு பள்ளியில் திடீர் பள்ளம் : கொசஸ்தலை ஆற்றில் அடித்து செல்லப்பட்டது கட்டட அடித்தளம்

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021
Advertisement
பள்ளிப்பட்டு--பள்ளிப்பட்டு அருகே, அரசு மேல்நிலைப் பள்ளி கட்டடத்தின் அடித்தளம் வலுவிழந்ததால், வகுப்பறையில், 200 சதுர அடி பரப்பில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால், மாணவர்களுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஒன்றியம், சொரக்காய்பேட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 350 மாணவர்கள் பயில்கின்றனர்.இரண்டு வாரங்களாக பெய்த
 பள்ளிப்பட்டு அரசு பள்ளியில் திடீர் பள்ளம் : கொசஸ்தலை ஆற்றில் அடித்து செல்லப்பட்டது கட்டட அடித்தளம்

பள்ளிப்பட்டு--பள்ளிப்பட்டு அருகே, அரசு மேல்நிலைப் பள்ளி கட்டடத்தின் அடித்தளம் வலுவிழந்ததால், வகுப்பறையில், 200 சதுர அடி பரப்பில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால், மாணவர்களுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஒன்றியம், சொரக்காய்பேட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 350 மாணவர்கள் பயில்கின்றனர்.இரண்டு வாரங்களாக பெய்த கன மழை வெள்ள நீர், கொசஸ்தலை ஆற்றை ஒட்டிய இப்பள்ளியை சூழ்ந்தது. பள்ளி வளாகத்தின் வழியாகவும், ஆற்று வெள்ளம் பாய்ந்து வருகிறது.கன மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மழை ஓய்ந்த நிலையில், நேற்று, மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.சொரக்காய்பேட்டை பள்ளியில், நேற்று காலை, ஆசிரியர்கள் வகுப்பறைகளை சோதனை செய்த போது, பிளஸ் 2 வகுப்பறையில், 200 சதுர அடி பரப்பிற்கு, பெரிய பள்ளம் ஏற்பட்டிருந்தது.அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், உடனடியாக மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றினர்.மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். பின், மாணவர்களுக்கு மட்டும் விடுப்பு அளிக்கப்பட்டு, வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள், பள்ளி கட்டடத்தை ஆய்வு செய்தனர்.இதில், கட்டடத்தின் அடித்தளத்தில் இருந்த மணல் பெருமளவில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், வகுப்பறையில் பள்ளம் ஏற்பட்டது தெரிய வந்தது.'முழுதுமாக ஆய்வு செய்து கட்டடத்தை உறுதியாக்கும் வரை, மாணவர்களை அந்த கட்டடத்தில் அனுமதிக்க வேண்டாம்' என, தலைமையாசிரியருக்கு அறிவுறுத்தினர். திருத்தணி மாவட்ட கல்வி அதிகாரி அருளரசு மற்றும் பள்ளிப்பட்டு தாசில்தார் சரவணன் ஆகியோர், நேற்று மாலை கட்டடத்தை ஆய்வு செய்தனர். இதில், ஆற்று வெள்ளம் பள்ளி வளாகத்திற்குள் வருவதை தடுக்கும் விதமாக, மணல் மூட்டைகளை அடுக்கி வைக்க தாசில்தார் உத்தரவிட்டார்.இந்த பள்ளியில் 2012ம் ஆண்டு, 10 வகுப்பறைகள் மற்றும் கணினி ஆய்வகம் உள்ளிட்டவை அடங்கிய மூன்றடுக்கு கட்டடம் 91 லட்சம் ரூபாய் மதிப்பில், 'நபார்டு' திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது.பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த போது, கட்டடத்தில் பள்ளம் ஏற்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.பள்ளி திறந்த பின், மாணவர்களுக்கு வகுப்பு நடக்கும் சமயத்தில் பள்ளம் ஏற்பட்டிருந்தால், அசம்பாவிதம் நடந்திருக்கும் என, பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர். சுழற்சி முறையில் பாடம்கொசஸ்தலை கரையோரத்தில் உள்ள இந்த பள்ளியின் கட்டடம் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. ஆசிரியர்களின் கண்காணிப்பால், மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது உள்ள இதர கட்டடங்களை தயார்படுத்தி, மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சேதம் அடைந்துள்ள கட்டட பகுதியில், தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளவும், மாணவர்கள் அந்த பகுதிக்கு செல்ல தடை விதித்து, அது குறித்த எச்சரிக்கை பலகை வைக்கவும் ஆசிரியர்களுக்கு அறிவறுத்தியுள்ளோம்.-அருளரசு, மாவட்ட கல்வி அதிகாரி, திருத்தணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X