பொது செய்தி

தமிழ்நாடு

பரந்துார் தரைப்பாலம் துண்டிப்பு

Added : நவ 23, 2021
Share
Advertisement
வாலாஜாபாத்-பரந்துார் ஏரி கலங்கலில், அளவுக்கு அதிகமாக தண்ணீர் வெளியேறுவதால், தற்காலிக தரைப்பாலம் சேதமடைந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம், பள்ளூர் கிராமத்தில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் - சோகண்டி கிராமம் வரை, மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில், 24 கி.மீ., ஒரு வழி சாலை உள்ளது.வாகன போக்குவரத்து அதிகரித்து

வாலாஜாபாத்-பரந்துார் ஏரி கலங்கலில், அளவுக்கு அதிகமாக தண்ணீர் வெளியேறுவதால், தற்காலிக தரைப்பாலம் சேதமடைந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம், பள்ளூர் கிராமத்தில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் - சோகண்டி கிராமம் வரை, மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில், 24 கி.மீ., ஒரு வழி சாலை உள்ளது.வாகன போக்குவரத்து அதிகரித்து இருப்பதால், மேம்படுத்தப்பட்ட இரு வழிச்சாலையாக விரிவுப்படுத்தும் பணி, கடந்த ஏப்ரல் மாதம் துவங்கியது.ரூ.44 கோடிஏழு மீட்டராக இருக்கும் சாலை, 10.5 மீட்டராக மாற்ற 44 கோடி ரூபாய் செலவில் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.குறிப்பாக பரந்துார், கொட்டவாக்கம் உள்ளிட்ட சில இடங்களில், தரைப்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்த ஏரிகளில், அளவுக்கு அதிகமாக கலங்கல் வழியாக தண்ணீர் வெளியேறி வருகிறது.இதில், பரந்துார் ஏரிக்கரையை ஒட்டி, தற்காலிக மாற்றுப்பாதைக்கு போடப்பட்ட மண் சாலை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால், புரிசை - பரந்துார் ஆகிய கிராமங்கள் இடையே, போக்குவரத்து முற்றிலும் தடை ஏற்பட்டு உள்ளது.இதனால் புரிசை, வளத்துார், அக்கமாபுரம், துளசாபுரம் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட கிராம மக்கள், காஞ்சிபுரம் செல்வதற்கு பள்ளூர் வழியாக சுற்றிச்செல்கின்றனர்.புரிசை கிராம மக்கள் கூறியதாவது:புரிசை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து, பரந்துார் வழியாக, 18 கி.மீ., துாரமுள்ள காஞ்சிபுரம் செல்வதற்கு சவுகரியமாக இருந்து வந்தது. தற்காலிக தரைப்பாலம் துண்டிப்பு ஏற்பட்டு இருப்பதால், பள்ளூர், வெள்ளைகேட் வழியாக, 5 கி.மீ., கூடுதலாக, காஞ்சிபுரம் செல்ல வேண்டி உள்ளது.நெடுஞ்சாலைத் துறையினர், பரந்துார் தற்காலிக தரைப்பாலத்தை விரிவுபடுத்தும் பணியை விரைவாக முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X