பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளம் பாதித்த பகுதி: மத்திய குழு ஆய்வு

Added : நவ 23, 2021
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்--வரதராஜபுரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை, மத்திய குழுவினர் நேற்று, ஆய்வு செய்தனர்.குன்றத்துார் ஒன்றியம், வரதராஜபுரம் உட்பட பல பகுதிகள், கன மழையால் பாதிப்பை சந்தித்தன. இந்த பாதிப்புகளை, மத்திய உள்துறை இணை செயலர் ராஜிவ் சர்மா தலைமையில் நான்கு பேர் உடைய ஒரு குழுவினர், நேற்று ஆய்வு செய்தனர்.இவர்களை, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்தர ரெட்டி வழிநடத்தி

ஸ்ரீபெரும்புதுார்--வரதராஜபுரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை, மத்திய குழுவினர் நேற்று, ஆய்வு செய்தனர்.குன்றத்துார் ஒன்றியம், வரதராஜபுரம் உட்பட பல பகுதிகள், கன மழையால் பாதிப்பை சந்தித்தன. இந்த பாதிப்புகளை, மத்திய உள்துறை இணை செயலர் ராஜிவ் சர்மா தலைமையில் நான்கு பேர் உடைய ஒரு குழுவினர், நேற்று ஆய்வு செய்தனர்.இவர்களை, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்தர ரெட்டி வழிநடத்தி சென்றார். காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வரவேற்றார்.வரதராஜபுரம், புவனேஷ்வரி நகரில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள தடுப்பு பணிகளை பார்வையிட்டனர்.பின், அதே பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட வெள்ளம் பாதிப்பு குறைத்த புகைப்பட காட்சிகளை பார்த்தனர்.அப்போது, மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து, வேளாண், தோட்டக்கலை, பொதுப்பணி, நெடுஞ்சாலை, வருவாய் துறை சார்பில், பாதிப்பு குறித்த புகைப்படத்தை அலுவலர்கள் காட்டினர்.அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்த பின், மத்திய குழுவினர், வரதராஜபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.அடையாறு கரையை உயர்த்தணும்!வரதராஜபுரம் பகுதியை பார்வையிட வந்த மத்திய குழுவினரிடம், வரதராஜபுரம் குடியிருப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில், குறைகளை எடுத்துரைத்தனர். அப்போது, ஆண்டுதோறும் பருவ மழையின்போது வெள்ள பாதிப்பு அதிகாமாக உள்ளது. அடையாறு கால்வாயை அகலப்படுத்தி, கரையை உயர்த்த வேண்டும் என, மனுவை அளித்தனர். இவற்றை கேட்டறிந்த மத்திய குழுவினர், மனுவை பெற்று நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X