பொது செய்தி

தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
ஊரக உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரமாகியுள்ளன. தேர்தல் தொடர்பான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வரும் என, எதிர்பார்க்கப்படும் நிலையில், கட்சிகள் விருப்பமனு பெற்று வருகின்றன. அதேசமயம் எஸ்.சி., வார்டுகள் ஒதுக்கீடு சம்பந்தமாக, கட்சியினர் விபரம் சேகரித்து வருகின்றனர்.தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரம்

ஊரக உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரமாகியுள்ளன. தேர்தல் தொடர்பான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வரும் என, எதிர்பார்க்கப்படும் நிலையில், கட்சிகள் விருப்பமனு பெற்று வருகின்றன.

அதேசமயம் எஸ்.சி., வார்டுகள் ஒதுக்கீடு சம்பந்தமாக, கட்சியினர் விபரம் சேகரித்து வருகின்றனர்.தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 6, 9ல் நடந்து முடிந்தது.தொடர்ந்து, தமிழகம் முழுதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், மாநில தேர்தல் ஆணையம் வேகமாக செய்து வருகிறது.தேர்தல் பணிகளை, அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தி, பூர்வாங்க பணிகளை முடிக்க அறிவுறுத்திஉள்ளது.அந்த வகையில், ஓட்டுச்சாவடி விபரங்கள் வெளியிடப்பட்டு, அவை இறுதி செய்யப்பட்டுள்ளன. அடுத்த சில நாட்களில், வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து, தேர்தல் அறிவிப்பு வரும்என எதிர்பார்க்கப்படுகிறது.ஓட்டு இயந்திரம்காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை, நகராட்சியாக இருந்து தரம் உயர்த்தப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சிக்கும், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத் ஆகிய மூன்று பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற தேர்தல் நடைபெற உள்ளது.

கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலைப் போல, ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெறாமல், முழுக்க முழுக்க மின்னணு ஓட்டு இயந்திரங்கள் மூலமாக தேர்தல் நடைபெற உள்ளது.கட்சி சார்ந்த பதவியிடம் என்பதாலும், குறைந்த எண்ணிக்கையில் வேட்பாளர்கள் போட்டியிடுவர் என்பதாலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த முறை போன்று இம்முறை பெரிய சொதப்பல்களும், குழப்பங்களும் நடைபெற வாய்ப்பில்லை என கருதப்படுகிறது.அதேபோல அரசியல் கட்சியினரும், தங்கள் தேர்தல் பணியை தீவிரமாக துவக்கியுள்ளனர்.அதன்படி, நகர்ப்புற தேர்தலுக்கு போட்டியிடுவோர், விருப்ப மனுக்களை அளிக்கலாம் என, தி.மு.க., - பா.ஜ., ஆகிய பிரதான கட்சிகளின் தலைமை அறிவித்துள்ளது. பிற கட்சிகளும், அடுத்தடுத்து விருப்ப மனுக்களை பெறுவது தொடர்பாக அறிவிப்பு வெளியிட உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ., சார்பில், காஞ்சிபுரம் மாநகராட்சி, உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் போட்டியிடும் கட்சியினரிடமிருந்து 21ல் இருந்து, விருப்ப மனுக்களை பெற்று வருகிறது.விருப்ப மனுமுன்னாள் எம்.எல்.ஏ., காயத்ரிதேவி, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு ஆகியோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.உத்திரமேரூர் பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. இதில் பா.ஜ., சார்பில் 11வது வார்டில் போட்டியிட நகர தலைவர் பிரேம்குமார் மற்றும் பிற வார்டுகளில் போட்டியிட என மொத்தம் 10 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் போட்டியிட இதுவரை, 135 பேர் விருப்ப மனுக்களை அளித்துள்ளதாக பா.ஜ., வட்டாரம் தெரிவித்தது.காஞ்சிபுரம் தெற்கு தி.மு.க., சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனுக்கள், காஞ்சிபுரம், டி.கே.நம்பி தெருவில் உள்ள தெற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகமான கலைஞர் பவள விழா மாளிகையில், நாளை காலை 9:00 மணி முதல், மாலை 3:00 மணி வரை நடைபெற உள்ளது.கட்டணம்இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட, காஞ்சிபுரம் மாநகராட்சி, இடைக்கழிநாடு, அச்சிறுப்பாக்கம், கருங்குழி, உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய ஐந்து பேரூராட்சிக்கும், மதுராந்தகம் நகராட்சியில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு வாங்கப்பட உள்ளது.மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாயும், நகராட்சி கவுன்சிலர்களுக்கு 5,000 ரூபாயும், பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு 2,500 ரூபாய் என, விருப்ப மனு கட்டணமாக பெறப்பட உள்ளது என, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க., செயலரும், உத்திரமேரூர் எம்.எல்.ஏ.,வுமான சுந்தர் தெரிவித்தார்.

அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னையில் நாளை நடைபெறுகிறது. அதன் பின், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்களை அக்கட்சி சார்பாக வாங்கப்படும் என தெரிகிறது. பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள், தங்கள் கட்சியினருடன் பேச்சு நடத்தி வருகின்றன.செங்கல்பட்டில் 9 இடங்களில் தேர்தல்செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மறைமலை நகர், மதுராந்தகம் ஆகிய நகராட்சிகள் மற்றும் அச்சிறுப்பாக்கம், கருங்குழி, இடைக்கழிநாடு, மால்லபுரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய பேருராட்சிகளில் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது.தேர்தல் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., - பா.ஜ., ஆகிய கட்சிகள், வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், நாளை கட்சிக்காரர்களிடம் விருப்ப மனு பெறப்பட உள்ளது.

இயந்திரங்கள் ஆய்வுதேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் ஒன்றான, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்க்கும் பணி, காஞ்சிபுரம் அண்ணா அரங்கில் நேற்று நடந்தது. இங்குள்ள மின்னணு ஓட்டு இயந்திரங்களை, அரசியல் கட்சியினர் முன்னிலையில், 'பெல்' நிறுவன பொறியாளர்கள் முதல் நிலை ஆய்வு செய்து வருகின்றனர். மின்னணு ஓட்டு இயந்திரங்கள், 992; கட்டுப்பாட்டு கருவிகள் 1,632 ஆகியவற்றை சுத்தம் செய்து, சரியாக இயங்குகின்றனவா என, ஆய்வு செய்தனர்.சரிசெய்யப்பட்ட இயந்திரங்கள் மேல், அதற்கான சான்றிதழ் ஸ்டிக்கர் ஒட்டி, ஓட்டு இயந்திரத்தில் உள்ள எண்ணை புதிதாக எழுதி, அதை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.

வேட்பாளர்கள் தேர்வு விறுவிறுசெங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் எஸ்.சி., பொது, பெண் பதவியிடங்கள், அதிகம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அரசியல் கட்சிகளின், பிற சமூக பிரமுகர்கள் போட்டியிட விரும்பிய வார்டு பகுதிகள், எஸ்.சி., பிரிவிற்கு ஒதுக்கப்பட்டன.

இதையடுத்து அரசியல் கட்சிகள், பொது அறிமுகமில்லாத, இச்சமூக நபரையே, வேட்பாளராக நிறுத்தும் அவசியம் ஏற்பட்டது. நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும், பல வார்டு பகுதிகள், எஸ்.சி., பொது, பெண் ஆகிய பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக எஸ்.சி., ஒதுக்கீடு வார்டு பகுதிகள், வேட்பாளர்கள் தேர்வில், அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X