சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பங்க்' ஊழியருக்கு வெட்டு 2 சிறுவர் உட்பட மூவர் சிக்கினர்

Added : நவ 23, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் கீழ்கதிர்பூர் புறவழிச்சாலையில், பெட்ரோல் பங்க்கில் ஊழியரை கத்தியால் வெட்டி, பணம் பறிக்க முயன்றவர்களில் மூவரை, போலீசார் பிடித்தனர்; இருவரை தேடுகின்றனர்.காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் புறவழிச்சாலை, தனியார் பெட்ரோல் பங்க்கில், நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு இரண்டு இருசக்கர வாகனங்களில் ஐந்து பேர் சென்றனர்.வாகனங்களுக்கு பெட்ரோல் போட

காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் கீழ்கதிர்பூர் புறவழிச்சாலையில், பெட்ரோல் பங்க்கில் ஊழியரை கத்தியால் வெட்டி, பணம் பறிக்க முயன்றவர்களில் மூவரை, போலீசார் பிடித்தனர்; இருவரை தேடுகின்றனர்.காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் புறவழிச்சாலை, தனியார் பெட்ரோல் பங்க்கில், நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு இரண்டு இருசக்கர வாகனங்களில் ஐந்து பேர் சென்றனர்.வாகனங்களுக்கு பெட்ரோல் போட கூறினர். பணியில் இருந்த ஊழியர் மணிகண்டன், 26, 'பெட்ரோல் ஸ்டாக் இல்லை' எனகூறியுள்ளார்.இதையடுத்து ஐவரும், மணிகண்டனை தாக்கி, அவர் வைத்திருந்த பணப்பையை பறிக்க முயன்று, கத்தியால் அவரது தலையில் வெட்டி, அங்கிருந்து தப்பிச்சென்றனர். அவ்வழியே வந்தோர், மணிகண்டனை, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.பாலுசெட்டிசத்திரம் போலீசார், ரோந்து பணியின்போது, கீழ்கதிர்பூர் வேகவதி ஆற்று பாலத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த மூவரை பிடித்தனர்.விசாரணையில் பங்க் ஊழியர் மணிகண்டனை வெட்டியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து சென்னையைச் சேர்ந்த ஜெகன், 20, மற்றும் இரு சிறுவர்களை பிடித்தனர்; தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X