அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை : எம்.எல்.ஏ., ஜெயராமன் குற்றச்சாட்டு

Added : நவ 23, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : ''ஆடு திருடுறவன், எஸ்.ஐ.,யை வெட்டுகிறார் என்றால், மக்கள் எப்படி நிம்மதியாக வாழ முடியும். சட்டம், ஒழுங்கு சரியாக இல்லை என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு,'' என, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது:பொள்ளாச்சி மாவட்டம் அமைய வேண்டும் என்பது, 50 ஆண்டு கால கனவாகும். கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனை



பொள்ளாச்சி : ''ஆடு திருடுறவன், எஸ்.ஐ.,யை வெட்டுகிறார் என்றால், மக்கள் எப்படி நிம்மதியாக வாழ முடியும். சட்டம், ஒழுங்கு சரியாக இல்லை என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு,'' என, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது:
பொள்ளாச்சி மாவட்டம் அமைய வேண்டும் என்பது, 50 ஆண்டு கால கனவாகும். கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனை புதிய கட்டடம் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அதற்கு, ஆளுங்கட்சியினர் மீண்டும் திறப்பு விழா செய்கின்றனர்.அரசு மருத்துவமனை கட்டடத்தை நான்கு மாடிகளாக விரிவுபடுத்தவும், குழந்தைகள் பிரிவுக்கு, மூன்று மாடி கட்டப்பட்டுள்ள சூழலில், மேலும் மூன்று மாடி கட்ட நிதியை, மத்திய அரசிடம் எம்.எல்.ஏ., என்ற முறையில் பெற்றுத்தந்துள்ளேன்.

இரண்டு மாதமாக அந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு அனுமதி, நிதியை பயன்படுத்தி கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆடு திருடுபவன், எஸ்.ஐ.,யை வெட்டுகிறார் என்றால், மக்கள் எப்படி நிம்மதியாக வாழ முடியும். இந்த ஆட்சியில், சட்டம் - ஒழுங்கு சரியாக இல்லை என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.

இவ்வாறு, ஜெயராமன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X