அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., தலைவர் நட்டா நாளை திருப்பூர் வருகை

Added : நவ 23, 2021
Share
Advertisement
திருப்பூர் : பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை திருப்பூர் வருகிறார்.தமிழகத்தில், பா.ஜ., வுக்கு சொந்தமாக திருப்பூர் உள்ளிட்ட, 17 மாவட்டங்களில் மாவட்ட அலுவலகம் கட்டும் பணி நடந்து வந்தது.இதில், திருப்பூர், ஈரோடு, நெல்லை, திருப்பத்துாரில் பணிகள் முடிந்து திறப்பு விழாவுக்கு தயாராகி உள்ளது. இவைகளை திறந்து வைக்க, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி., நட்டா நாளை திருப்பூர்
 பா.ஜ., தலைவர் நட்டா  நாளை திருப்பூர் வருகை


திருப்பூர் : பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை திருப்பூர் வருகிறார்.
தமிழகத்தில், பா.ஜ., வுக்கு சொந்தமாக திருப்பூர் உள்ளிட்ட, 17 மாவட்டங்களில் மாவட்ட அலுவலகம் கட்டும் பணி நடந்து வந்தது.இதில், திருப்பூர், ஈரோடு, நெல்லை, திருப்பத்துாரில் பணிகள் முடிந்து திறப்பு விழாவுக்கு தயாராகி உள்ளது. இவைகளை திறந்து வைக்க, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி., நட்டா நாளை திருப்பூர் வருகிறார்.

டில்லியிலிருந்து விமானம் மூலம் நாளை மதியம், 12:00 மணிக்கு கோவை வரும் நட்டா, கார் மூலம் திருப்பூர் வருகிறார். பல்லடத்தில், 12:45 மணிக்கு பா.ஜ.,வினர் வரவேற்பு அளிக்கின்றனர். அதன்பின், லட்சுமி திருமண மண்டபத்தில் நடக்கும் பா.ஜ., மாநில செயற்குழு கூட்டத்தில், 2:30 மணிக்கு பங்கேற்று பேச உள்ளார்.

திருப்பூர், பல்லடம் ரோடு, வித்யாலயம் பகுதியில், கட்டப்பட்டுள்ள மாவட்ட பா.ஜ., அலுவலகத்தை, மாலை 3:45 மணிக்கு திறந்து வைக்கிறார். அங்கிருந்தபடி, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், ஈரோடு, நெல்லை, திருப்பத்துாரில் கட்டப்பட்டுள்ள அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X