பொது செய்தி

தமிழ்நாடு

'வேடிக்கை பார்ப்பதே வாடிக்கையாக போச்சு': வனத்துறையினரை கண்டித்து மறியல்

Added : நவ 23, 2021
Share
Advertisement
பவானிசாகர்: பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கி, ஆடுகள் பலியாவது தொடரும் நிலையில், வனத்துறை அதிகாரிகளை கண்டித்து, விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பவானிசாகர் வனச்சரகம் பசுவபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலாமணி. இவரது விவசாய தோட்டம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. தோட்டத்தில் ஆடு வளர்க்கிறார். நேற்று காலை கொட்டகைக்கு சென்று பார்த்தபோது, ஒரு வெள்ளாடு கழுத்தில்

பவானிசாகர்: பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கி, ஆடுகள் பலியாவது தொடரும் நிலையில், வனத்துறை அதிகாரிகளை கண்டித்து, விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பவானிசாகர் வனச்சரகம் பசுவபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலாமணி. இவரது விவசாய தோட்டம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. தோட்டத்தில் ஆடு வளர்க்கிறார். நேற்று காலை கொட்டகைக்கு சென்று பார்த்தபோது, ஒரு வெள்ளாடு கழுத்தில் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தது. இதேபோல் மற்றொரு வீட்டிலும் ஒரு வெள்ளாடு இறந்து கிடந்தது. பவானிசாகர் வனத்துறையினர் ஊழியர்கள் ஆய்வில், சிறுத்தை தாக்கி பலியானது உறுதியானது. இந்நிலையில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், பசுவபாளையம் பஸ் நிறுத்தம் அருகே, பலியான ஆடுகளை சாலையில் போட்டு, நேற்று மதியம் மறியலில் ஈடுபட்டனர். சத்தி டி.எஸ்.பி., ஜெயபாலன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விவசாயிகள் கூறியதாவது: ஆடு, மாடுகளை சிறுத்தை அடித்து கொல்வது, தொடர்கதையாகி விட்டது. ஒரு வாரத்தில், 10 ஆடுகள் பலியாகியுள்ளன. காவலுக்கு இருந்த ஒரு நாயையும் கடித்து கொன்றுள்ளது. தகவல் தெரிவித்தால் வனத்துறை அதிகாரிகள், உடனடியாக வருவதில்லை. சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்காமல், மெத்தனமாக உள்ளனர். இவ்வாறு விவசாயிகள் கூறினர். வனத்துறை அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக, போலீசார் உறுதியளிக்கவே, மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் பவானிசாகர் - பண்ணாரி சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X