பொது செய்தி

தமிழ்நாடு

பெரியார்நகர் மக்களுக்கு 'கொஞ்சம்' நிம்மதி

Added : நவ 23, 2021
Share
Advertisement
ஈரோடு: நமது நாளிதழ் செய்தி எதிரொலியாக, பாதாள சாக்கடை இணைப்பு பணிக்கு, தோண்டிப்போட்ட குழியை மூடி, மக்கள் நடக்க வழிவகை செய்தது, மாநகராட்சி நிர்வாகம். ஈரோடு மாநகராட்சி, 44வது வார்டு பெரியார் நகரின், ஒன்பதாவது வீதியில், 40க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு, பாதாள சாக்கடை இணைப்பு வழங்க மாநகராட்சி சார்பில் பணி தொடங்கியது. இதில், 20 வீடுகளுக்கு இணைப்பு தரப்பட்ட நிலையில், பணியை

ஈரோடு: நமது நாளிதழ் செய்தி எதிரொலியாக, பாதாள சாக்கடை இணைப்பு பணிக்கு, தோண்டிப்போட்ட குழியை மூடி, மக்கள் நடக்க வழிவகை செய்தது, மாநகராட்சி நிர்வாகம். ஈரோடு மாநகராட்சி, 44வது வார்டு பெரியார் நகரின், ஒன்பதாவது வீதியில், 40க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு, பாதாள சாக்கடை இணைப்பு வழங்க மாநகராட்சி சார்பில் பணி தொடங்கியது. இதில், 20 வீடுகளுக்கு இணைப்பு தரப்பட்ட நிலையில், பணியை முடிக்காததால், 25 வீடுகளுக்கு இணைப்பு தரவில்லை. இதனால் தோண்டிய குழிகளில் மழை நீர் தேங்கி, துர்நாற்றம் மற்றும் கொசுக்கடி அதிகரித்துள்ளது. நடந்து செல்வதே சவாலாக மாறியுள்ளது. டெங்கு, சிக்குன் குனியா காய்ச்சல் அச்சத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக, போராட்ட வாழ்க்கை வாழ்ந்து வருவதாக, அப்பகுதிவாசிகள் வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து நமது நாளிதழில் நேற்று செய்தி வந்தது. சிறிது நேரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் களமிறங்கினர். டெங்கு காய்ச்சலுக்கு வழிவகுக்கும் குழியை மூடி, மக்கள் நடந்து செல்லும் வழியில் சாலையை சீரமைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X