பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட பசுமை பாதுகாப்புக்குழு முதல் கூட்டம்: அரசு நிலங்களில் மரம் வைக்க வலியுறுத்தல்

Added : நவ 23, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்ட பசுமை பாதுகாப்புக்குழுவின் முதல் கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., முருகேசன் தலைமை வகித்தார். இதில் ஈரோடு மாவட்ட வன அலுவலர் கவுதம் பேசியதாவது: சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி, அரசு நிலங்கள், அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் மரம் வெட்டுதல், மரம் நடுதல் போன்ற செயல்பாடுகளை கண்காணிக்க, மாவட்ட அளவில் பசுமை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு: ஈரோடு மாவட்ட பசுமை பாதுகாப்புக்குழுவின் முதல் கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., முருகேசன் தலைமை வகித்தார். இதில் ஈரோடு மாவட்ட வன அலுவலர் கவுதம் பேசியதாவது: சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி, அரசு நிலங்கள், அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் மரம் வெட்டுதல், மரம் நடுதல் போன்ற செயல்பாடுகளை கண்காணிக்க, மாவட்ட அளவில் பசுமை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலம், பசுமையை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


கூட்டத்தில் ஈரோடு சிறகுகள் அமைப்பு தலைவர் விமல் கருப்பணன் பேசியதாவது: மும்பை மாநகராட்சியில் உள்ளதுபோல, மரம் அறுவை சிகிச்சை நிபுணர் நியமித்து, தகுதியான மரங்களை கண்டறிந்து வளர்க்கவும், அவற்றை வேறு இடங்களுக்கு மாற்றவும் செய்ய வேண்டும். மின் துறை, குடிநீர் வினியோகம், நெடுஞ்சாலை உள்ளிட்ட துறையினர் மரங்களை அகற்றும்போது, முன்னதாக எங்களிடம் தெரிவித்தால், அம்மரங்கள், கிளைகளை சேகரிப்போம். ஸ்பான்சர் மூலம் மரக்கட்டை, இலை, குச்சிகளை தூளாக அரைத்து, ஆத்மா மனித உடல் எரியூட்டு மையம், பாய்லர் யூனிட், விவசாயத்துக்கு வழங்கலாம். மாவட்ட நிர்வாகம் இடம் ஒதுக்கி, நர்சரி அமைக்க உதவ வேண்டும். ரிசர்வ் சைட், கோவில் நிலம், அரசு நிலங்களில் நீண்ட காலமாக பயன்பாடு இல்லாத இடங்களை கண்டறிந்து தெரிவித்தால், அங்கு தேவையான, அரிய மரங்கள் வைப்போம். இவற்றுக்கு தண்ணீர் ஊற்றும் பொறுப்பை உள்ளாட்சி அமைப்புகள் ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதுபோல் பல்வேறு அமைப்பினலர் பல கோரிக்கைகளை முன் வைத்தனர். அதிகாரிகள் பேசுகையில், 'வீட்டுமனை உள்ளிட்ட சைட்டுகள் போடும்போது, ரிசர்வ் சைட்களில் மரம் வைத்தல், அரசு நிலம், அரசு அலுவலக வளாகம், பொது இடங்களில் மரங்களை வைக்க, இக்குழு உதவும். அவர்களுக்கு தேவையான உதவி, முன்னுரிமைகளை மாவட்ட நிர்வாகம் வழங்கும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X