சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆற்றில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி: போலீசார் கண்ணில் பட்டதால் பிழைத்தார்

Added : நவ 23, 2021
Share
Advertisement
ஈரோடு: கருங்கல்பாளையத்தில் காவிரி ஆற்றில், தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை, ரோந்து சென்ற போலீசார் மீட்டனர். ஈரோடு, கருங்கல்பாளையத்தில் காவிரி ஆறு செல்கிறது. கடந்த சில நாட்களில் ஆற்றில் குதித்து ஒருவர் தற்கொலை, ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனால் கருங்கல்பாளையம் போலீசார், இரவில் காவிரி ஆற்றுப்பக்கம் ரோந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு,

ஈரோடு: கருங்கல்பாளையத்தில் காவிரி ஆற்றில், தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை, ரோந்து சென்ற போலீசார் மீட்டனர். ஈரோடு, கருங்கல்பாளையத்தில் காவிரி ஆறு செல்கிறது. கடந்த சில நாட்களில் ஆற்றில் குதித்து ஒருவர் தற்கொலை, ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனால் கருங்கல்பாளையம் போலீசார், இரவில் காவிரி ஆற்றுப்பக்கம் ரோந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, காவிரிக்கரையில் உள்ள பிள்ளையார் கோவில் வழியாக, பெண் ஒருவர் ஆற்றுக்குள் இறங்கி கொண்டிருந்தார். ரோந்து சென்ற கருங்கல்பாளையம் போலீசார், பெண்ணை தடுத்து கரைக்கு அழைத்து வந்தனர். விசாரணையில் நாமக்கல் மாவட்டம், மொளசி, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த பரமசிவம் மனைவி நாச்சாம்மாள், 64, என்பது தெரிந்தது. உடல் நிலை சரியில்லாத நிலையில், குடும்பத்தில் பிரச்னை இருந்ததால், ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள வந்ததாக கூறினார். வெப்படையில் வேலை பார்க்கும் பாட்டியின் மகனுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். அவருக்கு அறிவுரை வழங்கி, மூதாட்டியை ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X