சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புழுவுக்கு ஆசப்பட்டு போகும் மீனே; தூண்டிலிலே மாட்டிக்கிட்டா சோகம் தானே? '3வது திருமணத்துக்கு முயன்றவரை கொலைகாரனாக மாற்றிய விதி'

Added : நவ 23, 2021
Share
Advertisement
ஈரோடு: திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய பெண்ணை, கொலை செய்து மூட்டை கட்டி வீசிய, கட்டுமான பணி மேற்பார்வையாளரை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு, ரங்கம்பாளையம், கே.கே.நகர், லட்சுமி கார்டன் குடியிருப்பு பகுதியில், கடந்த, 12ம் தேதி சாக்கு மூட்டை கிடந்தது. அதில், 40 வயது மதிக்கதக்க பெண் உடல் இருந்தது. கொலை செய்யப்பட்டு வீசப்பட்டதை உறுதி செய்த நிலையில், டவுன் டி.எஸ்.பி., ஆனந்தகுமார்

ஈரோடு: திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய பெண்ணை, கொலை செய்து மூட்டை கட்டி வீசிய, கட்டுமான பணி மேற்பார்வையாளரை போலீசார் கைது செய்தனர்.


ஈரோடு, ரங்கம்பாளையம், கே.கே.நகர், லட்சுமி கார்டன் குடியிருப்பு பகுதியில், கடந்த, 12ம் தேதி சாக்கு மூட்டை கிடந்தது. அதில், 40 வயது மதிக்கதக்க பெண் உடல் இருந்தது. கொலை செய்யப்பட்டு வீசப்பட்டதை உறுதி செய்த நிலையில், டவுன் டி.எஸ்.பி., ஆனந்தகுமார் தலைமையில், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த கட்டட பணி மேற்பார்வையாளர் யோகநாதன், 49, என்பவரை பிடித்தனர். இதில் பெண்ணை கொலை செய்து, சாக்கு மூட்டையில் கட்டி வீசியதை ஒப்புக் கொண்டார். வாக்குமூலத்தில் யோகநாதன் தெரிவித்ததாக, போலீசார் கூறியதாவது: பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாட்டால் ஆறு மாதத்துக்கு முன் அவர் பிரிந்து சென்று விட்டார். மற்றொரு பெண்ணை திருமணம் செய்தேன். அவர் ஒரு மாதத்துக்கு முன் பிரிந்து சென்றார். இதனால் தனியார் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தேன். அவர்கள் ஒரு பெண்ணின் மொபைல் எண்ணை தந்தனர். அவரிடம் பேசியபோது, கோவையில் ஒரு முதியவரை பராமரித்து வரும் வேலை செய்கிறேன். கணவர் இறந்து விட்டார். மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். நேரில் பார்த்து பிடித்தால், திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அவரை பார்க்க கோவை சென்றேன். அந்தப்பெண்ணும் வந்தார். எனக்கு பிடிக்காததால், திருமணம் செய்து கொள்ள மறுத்தேன். அவரோ, 'நான் வேலையை விட்டு வந்து விட்டேன். திரும்பி அங்கு செல்ல முடியாது. இன்று ஒருநாள் மட்டும் உங்கள் வீட்டில் தங்கி விட்டு, மறுநாள் சொந்த ஊருக்கு சென்று விடுவேன்' என்றார். இதனால் கடந்த, 8ம் தேதி வீட்டுக்கு அழைத்து வந்தேன். ஆனால், மறுநாள் அவருடைய வீட்டுக்கு செல்லாமல், திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையேல், 10 பவுன் நகை தரவேண்டும். மறுத்தால் அக்கம்பக்கத்தினரிடம் கூறி விடுவேன் என்று மிரட்டினார். இதனால் பயந்துபோய், வீட்டில் தங்க வைத்தேன். கடந்த, 11ம் தேதி திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியபோது மறுத்தேன். அக்கம்பக்கத்தினரிடம் தெரிவிப்பதாக சொல்லி ஓடினார். தடுத்து கையால் அடித்தபோது மயங்கி விழுந்தாள். பயத்துடன் ஆத்திரமும் சேர்ந்து கொண்டதால், கழுத்தை காலால் மிதித்து கொன்றேன். உடலை சாக்கில் போட்டு மூட்டை கட்டினேன். டூவீலரில் வைத்து, குடியிருப்பு பகுதி காலியிடத்தில் வீசினேன். போலீசாரின் தீவிர விசாரணையில் சிக்கி விட்டேன். இவ்வாறு அவர் கூறினார். யோகநாதனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு கிளை சிறையில் நேற்று அடைத்தனர்.

யோகநாதனை பிடித்தது எப்படி? டவுன் டி.எஸ்.பி., ஆனந்தகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார், கே.கே.நகர், லட்சுமி கார்டன் குடியிருப்பு பகுதியில், வீடு, வீடாக விசாரணை நடத்தினர். அப்போது யோகநாதன் செயல்பாட்டில் சந்தேகம் அடைந்தனர். அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவருடைய மொபைல்போனை ஆய்வு செய்தபோது, 9ம் தேதி முதல், 14ம் தேதி வரை சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதற்கு முன், 15 நாட்களாக அடிக்கடி ஒரு எண்ணில் பேசியதை கண்டுபிடித்தனர். அந்த எண்ணை ஆய்வு செய்தபோது, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த ஜெயலட்சுமி, 39, என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிந்தது. அந்த எண் கடந்த, 11ம் தேதி முதல், சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதையும் கண்டுபிடித்தனர். இதனால் யோகநாதனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் ஜெயலட்சுமியை கொன்றதையும், அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X