பள்ளி வகுப்பறை மது பாரான அவலம்; பூட்டை உடைத்து குடிமகன்கள் ஆட்டம்| Dinamalar

பள்ளி வகுப்பறை மது பாரான அவலம்; பூட்டை உடைத்து குடிமகன்கள் ஆட்டம்

Added : நவ 23, 2021
Share
அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே குறிச்சியில், அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளி சுற்றுச்சுவர் சில மாதங்களுக்கு முன்பு சேதமானது. சீரமைக்காததால் விடுமுறை நாட்களில், அதன் வழியே சமூக விரோதிகள் பள்ளி வளாகத்தில் நுழைகின்றனர். மது குடித்து ஆட்டம் போடுகின்றனர்.

அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே குறிச்சியில், அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளி சுற்றுச்சுவர் சில மாதங்களுக்கு முன்பு சேதமானது. சீரமைக்காததால் விடுமுறை நாட்களில், அதன் வழியே சமூக விரோதிகள் பள்ளி வளாகத்தில் நுழைகின்றனர். மது குடித்து ஆட்டம் போடுகின்றனர். வழக்கம்போல் நேற்று முன்தினமும், ஒரு பள்ளி வகுப்பறையை டாஸ்மாக் பாராக மாற்றி, குடிமகன்கள் ஆட்டம் போட்டுள்ளனர். ஆனால், காலி மது பாட்டில்கள், சரக்கு குடிக்க பயன்படுத்திய டம்ளர்களை, டேபிள் மீது வைத்து விட்டு சென்று விட்டனர். நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர் இதைப்பார்த்து முகம் சுளித்தனர். ஆசிரியர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வகுப்பறை கதவு பூட்டை உடைத்து, ஆசாமிகள் உள்ளே புகுந்தது தெரிய வந்தது. இரண்டு சேர்களையும் எடுத்து சென்று விட்டது தெரிய வந்தது. விடுமுறை நாட்களில், பள்ளி வளாகத்தில் குடிமகன்கள், சமூக விரோதிகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. இதற்கு பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X