திருப்பூர் : பஞ்சு, நுால் விலை உயர்வை கண்டித்து, வரும் 26ம் தேதி திருப்பூரில் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நுாற்றுக்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன. திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா) சார்பில், அவசர ஆலோசனை கூட்டம், காயத்ரி ஓட்டலில் நேற்று நடந்தது.
![]()
|
'டீமா' தலைவர் முத்துரத்தினம் தலைமை வகித்தார். பின்னலாடை துறை சார்ந்த அனைத்து சங்கங்கள், தொழிற் சங்கங்கள், அரசியல், வணிகர் சங்கத்தினர் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில், பங்கேற்ற தொழில் துறை சங்கங்களின் நிர்வாகிகள், 'மத்திய அரசு, பஞ்சு, நுால் ஏற்றுமதியை உடனடியாக ரத்து செய்யவேண்டும்.
இந்திய பருத்தி கழகம், வர்த்தகர்களுக்கு, பஞ்சு விற்பனை செய்யக்கூடாது. பஞ்சு இறக்குமதி வரியை நீக்கவேண்டும். தமிழக அரசு, பருத்தி கொள்முதல் மையத்தை உருவாக்கி, நுாற்பாலைகளுக்கு சீரான விலைக்கு பஞ்சு வழங்க வேண்டும்,' என வலியுறுத்தினர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, 26ம் தேதி, ஒருநாள் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது. அன்று, பின்னலாடை உற்பத்தி கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தியேட்டர்கள் இயங்காது.
![]()
|
பங்கேற்கும் அமைப்புகள்
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா), திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா), திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர் சங்கம், நுால் வியாபாரிகள் சங்கம், நிட்மா, டெக்பா, டிப், பவர்டேபிள் உரிமையாளர் சங்கம், காஜா பட்டன், செக்கிங் அயர்னிங் சங்கம். ரைசிங், காம்பாக்டிங், வர்த்தகர் (பையிங்' சங்கம், எம்ப்ராய்டரி, எலாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம், பாலிபேக் உற்பத்தியாளர் சங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு, அட்டைபெட்டி உற்பத்தியாளர் சங்கம், விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்கம், தென்னிந்திய தியேட்டர் உரிமையாளர் சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கம்.
இவை தவிர, அ.தி.மு.க., மா.கம்யூ., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், பா.ம.க., எஸ்.டி.பி.ஐ., கொங்கு நாடு விவசாயிகள் கட்சி, மஜித் சேவை குழு, ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கொங்கு நாடு முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி.எல்.பி.எப்., - சி.ஐ.டி.யு., - அண்ணா தொழிற் சங்கம், பி.எம்.எஸ்., - ஏ.ஐ.டி.யு.சி., சங்கங்கள் ஆகிய அரசியல் கட்சியினரும், முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
உண்ணாவிரம்
முழு அடைப்பு நாளன்று, ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டமும் நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான, இடம் பின்னர் அறிவிக்கப்படும் என கூட்டுக்கமிட்டியினர் அறிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE