தமிழ்நாடு

ஊட்டியில் பகலில் உலா வரும் நூதன திருடர்கள் : இலவச திட்ட கணக்கெடுப்பு பெயரில் களவு

Added : ஆக 06, 2011
Share
Advertisement
ஊட்டி : அரசின் இலவச திட்டங்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்துவதாக கூறி, நூதன களவில் ஈடுபடும் பகல் நேர திருடர்களை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.ஊட்டியில் கடந்த சில மாதங்களாக பூட்டிய வீட்டை உடைத்து இரவு நேரத்தில் கொள்ளையடிக்கும் கும்பல் அதிகரித்தது. கிரீன் பீல்டு, பெரிய பள்ளி வாசல் உட்பட சில இடங்களில் வீடுகளிலும், இரவில் நிறுத்தப்படும் வாகனங்களில்

ஊட்டி : அரசின் இலவச திட்டங்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்துவதாக கூறி, நூதன களவில் ஈடுபடும் பகல் நேர திருடர்களை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.ஊட்டியில் கடந்த சில மாதங்களாக பூட்டிய வீட்டை உடைத்து இரவு நேரத்தில் கொள்ளையடிக்கும் கும்பல் அதிகரித்தது. கிரீன் பீல்டு, பெரிய பள்ளி வாசல் உட்பட சில இடங்களில் வீடுகளிலும், இரவில் நிறுத்தப்படும் வாகனங்களில் டேப்ரிக்கார்டர், டயர் திருடும் கும்பலும் அதிகரித்தது. இதில், சிலரை போலீசார் கைது செய்து பொருட்களை மீட்டனர். சில கொள்ளைகளின் விசாரணைகள் நடந்து வருகிறது. இந்நிலையில், ஊட்டி எச்.பி.எப்., பகுதியில் உள்ள வீடுகளில் நேற்று முன்தினம் மாலை ஒரு சிலர்," அரசின் இலவச திட்டங்களுக்கு கணக்கெடுக்க வந்துள்ளோம்,' என தெரிவித்து, 30க்கும் வீடுகளில் ஆய்வு பணிகளை நடத்தி உள்ளனர்.
ஒரு வீட்டில் புட்டம்மாள்(65) என்ற மூதாட்டி மட்டும் இருந்துள்ளார். அவரிடம் பல்வேறு விபரங்களை சேகரித்து, திடீரென வீட்டுக்குள் புகுந்து அவரிடம் முக்கால் பவுன் தங்க கம்மலை ஒரு இளைஞர் எடுத்து சென்றுள்ளார்.இந்த தகவல் போலீசாருக்கு தெரிய வர, அப்பகுதிக்கு வந்து விசாரணை நடத்தி உள்ளனர். ஆனால், ஒருவர் கூட சிக்கவில்லை. பகல் நேரத்தில் நடக்கும் இதுபோன்ற நூதன திருட்டுகளால், குறிப்பாக பெண்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். அரசு ஊழியர்கள் என்ற பெயரில் வருபவர்களை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது குறித்த குழப்பம் அவர்களிடையே ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், நீலகிரி எஸ்.பி., நிஜாமுதீன் நிருபர்களிடம் கூறுகையில்,"" இத்தகைய திருட்டு சம்பவங்கள் சமவெளி பகுதியில் மட்டுமே நடக்கும். இங்கு நடப்பதை பார்க்கும் போது, வெளியாட்கள் திட்டமிட்டு இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், மக்கள் ஆய்வுக்கு வரும் ஊழியர்கள் குறித்து நன்கு அறிந்த பின்னர் அவர்களிடம் தகவல்களை தெரிவிக்க வேண்டும். புதிய ஆட்கள் அல்லது சந்தேகம் படும் நபர்கள் குறித்து அறிந்தால் 0423-2223828 என் எண்ணுக்கு தகவல் அளிக்கலாம். உடனடியாக அப்பகுதிக்கு போலீசார் வருவர். அறிமுகமில்லாத ஆட்கள் வரும்போது, குறிப்பாக பெண்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஊட்டி, குன்னூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடந்துள்ள திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களை பிடிக்க விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X