பொது செய்தி

தமிழ்நாடு

வழித்தடத்தை அளவீடு செய்து தராததால் மண்ணெண்ணெய் கேனுடன் வந்த தொழிலாளி

Added : நவ 23, 2021
Share
Advertisement
இடைப்பாடி: வழித்தடத்தை அளவீடு செய்து தராததை கண்டித்து, தாலுகா அலுவலகத்துக்கு, விசைத்தறி தொழிலாளி, மண்ணெண்ணெய் கேனுடன் தீக்குளிக்க வந்தார்.இடைப்பாடி, ஆலச்சம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கதுரை, 35. விசைத்தறி தொழிலாளி. இவர் வீட்டுக்கு செல்லும் வழியை அடைத்து, அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வீடு கட்டியுள்ளார். இதனால், தடத்தை அளவீடு செய்யக்கோரி, தங்கதுரை, ஆறு மாதமாக இடைப்பாடி தாலுகா

இடைப்பாடி: வழித்தடத்தை அளவீடு செய்து தராததை கண்டித்து, தாலுகா அலுவலகத்துக்கு, விசைத்தறி தொழிலாளி, மண்ணெண்ணெய் கேனுடன் தீக்குளிக்க வந்தார்.


இடைப்பாடி, ஆலச்சம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கதுரை, 35. விசைத்தறி தொழிலாளி. இவர் வீட்டுக்கு செல்லும் வழியை அடைத்து, அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வீடு கட்டியுள்ளார். இதனால், தடத்தை அளவீடு செய்யக்கோரி, தங்கதுரை, ஆறு மாதமாக இடைப்பாடி தாலுகா அலுவலகத்துக்கு சென்று வருகிறார். ஆனால், அது நகராட்சி தடம் என்பதால், அந்த அதிகாரிகள் தான் மனு அளிக்க வேண்டும் என, 'சர்வே' பிரிவு அதிகாரிகள் கூறினர். அதன்படி, நகராட்சி கமிஷனரும், நில அளவீடுக்கு பணம் கட்டி மனு கொடுத்துள்ளார். இருப்பினும் அளவீடு செய்யப்படவில்லை. பொறுமை இழந்த தங்கதுரை, தன் குடும்பத்தினருடன் மண்ணெண்?ணய் கேனுடன் நேற்று தீக்குளிக்க தாலுகா அலுவலகம் வந்தார். பின், அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்த, தாசில்தார் விமல் பிரகாசத்திடம் மனு கொடுத்தார். இதுகுறித்து தங்கதுரை கூறுகையில், ''அளவீடு செய்யாமல் தாலுகா அலுவலகத்தினர் இழுத்தடிப்பதால் குடும்பத்துடன் தீக்குளிக்க வந்தேன். கடைசியாக ஒருமுறை மனுகொடுங்கள் என சிலர் கூறியதால் தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளேன். இனியும் நடவடிக்கை இல்லாவிடில், தீக்குளிப்பதை தவிர வழியில்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X