பொது செய்தி

தமிழ்நாடு

விசாரணைக்கு அழைத்துச்சென்றவரை விடுவிக்க உறவினர்கள் சாலை மறியல்

Added : நவ 23, 2021
Share
Advertisement
நங்கவள்ளி: நங்கவள்ளியில், இ.கம்யூ., கட்சி ஒன்றிய செயலர் ஜீவானந்தத்துக்கு சொந்தமாக, அம்பேத்கர் காலனி பின்புறம் நிலம் உள்ளது. அங்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்தது. அதில், காலனி இடத்தையும் சேர்த்து கட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, கடந்த, 17ல், இரு தரப்பு இடையே மோதல் ஏற்பட்டு, நங்கள்ளி போலீசார் விசாரிக்கின்றனர். நேற்று, ஒரு பிரிவை சேர்ந்த உமாசங்கர், 32,

நங்கவள்ளி: நங்கவள்ளியில், இ.கம்யூ., கட்சி ஒன்றிய செயலர் ஜீவானந்தத்துக்கு சொந்தமாக, அம்பேத்கர் காலனி பின்புறம் நிலம் உள்ளது. அங்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்தது. அதில், காலனி இடத்தையும் சேர்த்து கட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, கடந்த, 17ல், இரு தரப்பு இடையே மோதல் ஏற்பட்டு, நங்கள்ளி போலீசார் விசாரிக்கின்றனர். நேற்று, ஒரு பிரிவை சேர்ந்த உமாசங்கர், 32, என்பவரை, போலீசார் விசாரிக்க அழைத்து சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது உறவினர்கள், காலை, 8:30 மணிக்கு நங்கவள்ளி பஸ் ஸ்டாண்ட் அருகே, டவுன் பஸ்சை தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தி கலைத்தனர். இதனால், 30 நிமிடம் நெரிசல் ஏற்பட்டது. ஓமலூர் டி.எஸ்.பி., சங்கீதா பேச்சு நடத்தினார். அப்போது, தகராறு நடந்த போது, சம்பவ இடத்தில் உமாசங்கர் இல்லை என்பது வீடியோ பதிவில் ஆய்வு செய்த பின் தெரிந்ததால் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, அனைவரும் ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X