மழையால் மாயமான பாதை; சடலத்தை வைத்து சாலை மறியல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் மாயமான பாதை; சடலத்தை வைத்து சாலை மறியல்

Added : நவ 23, 2021
Share
வாழப்பாடி: வாழப்பாடி, முத்தம்பட்டி ஊராட்சியை சேர்ந்த ஒரு பிரிவினருக்கு, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலை அருகே மயானம் உள்ளது. யாரேனும் இறந்தால், அங்கு கொண்டு செல்ல, கோதுமலை நீரோடை வழியாக சுரங்கப்பாலத்தை கடந்து செல்ல வேண்டும். ஆனால், ஒரு மாதமாக மழையால், அந்த ஓடையில் தண்ணீர் தேங்கி ஆறுபோல் செல்கிறது. இந்நிலையில், அங்கமுத்து, 75, என்பவர் நேற்று முன்தினம்

வாழப்பாடி: வாழப்பாடி, முத்தம்பட்டி ஊராட்சியை சேர்ந்த ஒரு பிரிவினருக்கு, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலை அருகே மயானம் உள்ளது. யாரேனும் இறந்தால், அங்கு கொண்டு செல்ல, கோதுமலை நீரோடை வழியாக சுரங்கப்பாலத்தை கடந்து செல்ல வேண்டும். ஆனால், ஒரு மாதமாக மழையால், அந்த ஓடையில் தண்ணீர் தேங்கி ஆறுபோல் செல்கிறது. இந்நிலையில், அங்கமுத்து, 75, என்பவர் நேற்று முன்தினம் இறந்தார். அவரது உடலை நேற்று காலை அடக்கம் செய்ய முடிவு செய்த நிலையில், தண்ணீர் செல்வதால் கொண்டு செல்ல வழியில்லை. இதனால், பாதை கோரி, முதியவரின் சடலத்தை, வாழப்பாடி - சேலம் பிரதான சாலையில் வைத்து, உறவினர்கள், நேற்று போராட்டம் நடத்தினர். தாசில்தார் வரதராஜன், வாழப்பாடி போலீசார் பேச்சு நடத்தினர். அதில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின், போலீசார் தடியடி நடத்தியதாக குற்றம்சாட்டி, சாலை மறியலில் ஈடுபட்டனர். பின் நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், உறவினர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின், சடலத்தை எடுத்துக்கொண்டு ஓடை தண்ணீரில் இறங்கி, முதியவரின் சடலத்தை எடுத்துச்சென்று, உறவினர்கள் அடக்கம் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X