திருப்பூர் : கிராமங்களில் இரண்டு 'டோஸ்' தடுப்பூசி செலுத்தி கொண்ட, ஆர்வ முள்ளவர்களை தேர்வு செய்து, 100 சதவீத தடுப்பூசி துாதர்களாக நியமித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், இம்மாத இறுதிக்குள், நுாறு சதவீத முதல் தவணை தடுப்பூசியும், 60 சதவீத இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்த சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளதுஅரசு, தனியார் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களில், இரண்டு 'டோஸ்' செலுத்தியவருக்கு, 'நான் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவன். நீங்கள் முழுமையாக செலுத்திக் கொண்டீர்களா? என்ற 'பேட்ஜ்' வழங்க திட்ட மிடப்பட்டுள்ளது.
இவற்றை பார்க்கும் சக பணியாளரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டுவர் என்பதால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட மற்றும் கிராம அளவிலும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில், ஆர்வ முள்ளவர்களை தேர்வு செய்து தடுப்பூசிக்கான துாதர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,'30க்கும் அதிகமான மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு உறுதியாகி வருகிறது. நுாறு சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி பேட்ஜ், துாதர் மூலம் விழிப்புணர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE