சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டின் தடம் அடைப்பு; 4 பேர் தீக்குளிக்க முயற்சி

Added : நவ 23, 2021
Share
Advertisement
சேலம்: கெங்கவல்லி, உலிபுரத்தை சேர்ந்தவர் மாரியாயி, 60. இவர், மகன் குமார், 37, பேரன், பேத்தியுடன் மனு கொடுக்க நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது, நுழைவாயில் முன், அனைவரும் டீசலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். போலீசார், அவர்களை தடுத்து மீட்டனர். பின், மாரியாயி கூறியதாவது: கடந்த, 2005ல், அதே பகுதியில், 2.72 ஏக்கர் இடத்தை, 1.65 லட்சம் ரூபாய்க்கு வாங்கி, அதில் வீடு கட்டி

சேலம்: கெங்கவல்லி, உலிபுரத்தை சேர்ந்தவர் மாரியாயி, 60. இவர், மகன் குமார், 37, பேரன், பேத்தியுடன் மனு கொடுக்க நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது, நுழைவாயில் முன், அனைவரும் டீசலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். போலீசார், அவர்களை தடுத்து மீட்டனர். பின், மாரியாயி கூறியதாவது: கடந்த, 2005ல், அதே பகுதியில், 2.72 ஏக்கர் இடத்தை, 1.65 லட்சம் ரூபாய்க்கு வாங்கி, அதில் வீடு கட்டி வசிக்கிறோம். ஒரு மாதத்துக்கு முன், வீட்டுக்கான தடத்தை, கல்லை வைத்து அடைத்து நடமாட முடியாதபடி தடுத்துவிட்டனர். வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து கெங்கவல்லி போலீஸ், தாசில்தார், முதல்வர் தனிப்பிரிவு வரை புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. தட வசதி ஏற்படுத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவே, தீக்குளிக்க கலெக்டர் அலுவலகம் வந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X